புதுச்சேரியின் பாகூர் தொகுதிக்குட்பட்ட ஒரு சிறிய கிராமம் – கீழ்பரிக்கல்பட்டு. இந்தச் சிறு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி அடைந்தனர். இது மாணவர்களின் கடின உழைப்பால் நிகழ்த்திருந்தாலும், இந்த வெற்றிக்கு இன்னொரு வண்ணம் சேர்த்தவர், அந்தத் தொகுதியின் எம்எல்ஏ செந்தில் குமார்.
சமீபத்தில் அந்த பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களிடம் பொதுத் தேர்வுக்காக ஊக்குவித்து பேசிய போது, அவர்களின் ஆசையை கேட்டேன். அப்போழுது நீங்கள் முழுமையான தேர்ச்சியை பெறுவீர்கள் என்றால், உங்களை சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்வேன்” என்று கூறி ஊக்கமளித்தார். அந்த வார்த்தை வெறும் வாக்குறுதியாக இல்லாமல், உண்மையான உறுதியாக மாறியது!

தேர்வு முடிவுகள் வந்தவுடன், மாணவர்கள் தங்கள் வெற்றியை கொண்டாடத் தயாராக இருந்தனர். எம்எல்ஏ, தனது சொந்த செலவில், 28 மாணவர்கள் மற்றும் 6 ஆசிரியர்கள் என மொத்தம் 34 பேரை ஊட்டிக்கு இரண்டு நாள் சுற்றுலா பயணம் அனுப்பி வைத்தார். இந்த சுற்றுலாப் பயணத்தில் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், தொட்ட பெட்டா, படகு இல்லம், அரசு அருங்காட்சியகம் என ஏராளமான இடங்களை பார்த்து மகிழ்ந்தனர்.
ஆசிரியர்களும் இதைப் பெரிதாக பாராட்டினர். “இது மாணவர்களுக்கு ஒரு ஊக்கமாகவும், ஒரு நினைவாகவும் இருக்கும். வெற்றி என்றால் புத்தகத்தில் மட்டுமல்ல, வாழ்வில் அனுபவிக்கும் மகிழ்ச்சியிலும் இருக்க வேண்டும் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு” என்றனர்.

இது வெறும் சுற்றுலா அல்ல, ஒரு பள்ளியில் இருக்கும் மாணவர்களின் கனவுகளை எப்படி உயர்த்த முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. அந்த சிறு கிராமத்தில் உள்ள மாணவர்களின் முதல் வெற்றி ஊட்டி வாசலில் தொடங்கியது!









