வணிகம்

சென்னையில் UEF வர்த்தக உச்சி மாநாடு கண்காட்சி 2025…

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் “UEF வர்த்தக உச்சி மாநாடு மற்றும் கண்காட்சி 2025″நிகழ்ச்சி இம்மாதம் 12,13,14 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் title sponsor-ஆக Kothari Industrial Corporation Limited இருந்தது. தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் TRB ராஜா துவங்கிவைத்த இந்த நிகழ்ச்சயில், 20க்கும் மேற்பட்ட பெரிய தொழில் நிறுவனங்கள், 80 சிறப்பு பேச்சாளர்கள் கலந்துகொண்டனர். 200 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியை துவங்கிவைத்த பிறகு, அமைச்சர் TRB ராஜா KICL ஸ்டாலை பார்வையிட்டார்.

UEF வர்த்தக உச்சிமாநாட்டின் தலைவரும், ஆற்காடு இளவரசரின் திவானுமான நவாப்சாதா ஆசிஃப் அலி, UEF தலைவரும் கோஸ்டல் எனர்ஜென், நிலக்கரி மற்றும் எண்ணெய் குழுமத்தின் நிறுவனருமான அகமது புஹாரி, பக்ரோ பிளஸ் நிர்வாக இயக்குனர் முகமது அப்துல்லா அலி ஃபக்ரோ, முன்னாள் மத்திய அமைச்சரவை அமைச்சர் ஆனந்த் சர்மா மற்றும் கோத்தாரி தொழில்துறை கார்ப்பரேஷன் லிமிடெட் நிர்வாகத் தலைவர் டாக்டர் ஜின்னா ரபிக் அகமது ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டின் சிறப்பம்சமாக ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி கவுன்சில் (UNSDC) உடனான ஒப்பந்தம் உட்பட 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த UEF உச்சிமாநாட்டில் கையெழுத்தானது. நிலையான வளர்ச்சி இலக்குகளை கல்விநிறுவனங்களில் அமல்படுத்துவதே UNSDCஉடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் கருவாக அமைந்துள்ளது. Anicut Capital மற்றும் UEF இணைந்து தொழில் முனைவோருக்கு முதலீட்டு உதவிகளை செய்வதற்காக ரூ.50 கோடி ஒதுக்கியிருப்பதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு, பல இளம் தொழில் முனைவோருக்கு உத்வேகமாக அமைந்தது.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை முன்வைத்து பல சிறப்பு கருத்தரங்குகள் நடைபெற்றன. இந்த கருத்தரங்கில், KICL தலைவர் ரஃபிக் அஹமது, kissflow நிறுவனர் சம்பந்தம், ட்வின்ஹேலத் இணை நிறுவனர் மாலுக் முகமத், பேச்சாளரும் ஹட்சன் நிறுவனதின் இணை இயக்குனருமான பாரதி பாஸ்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர். KICL நிறுவனத்தின் Executive Vice President கார்த்திகேயன் மற்றும் Vice President சஹாபுதீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related Posts