அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். சீனா, ஜப்பான், பிரேசில்… போன்ற பல நாடுகளின் மீது அதிரடி வரி விதிப்பை அமல் படுத்தியுள்ளார். அந்த கோணத்தில் அவர் பார்வை இந்தியா மேல் திரும்பியது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி, ஆகஸ்ட் 7 ஆம் தேதி 25% வரி, ஆகஸ்ட் 27 ஆம் தேதி 25% வரி — மொத்தம் 50% வரியை இந்தியாவுக்கு விதித்துள்ளார்.
இதற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிக நஷ்டம் ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். காரணம், “பின்னலாடைத் தலைநகரம்” என்று அழைக்கப்படும் திருப்பூர், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிக Export செய்யும் மாவட்டமாகும். அதேபோல், கடல்சார் உணவுகள் ஏற்றுமதியிலும் தமிழகத்துக்கு பெரும் இழப்பு ஏற்படும்.
இந்த நிலையில், இந்தியார்கள் அமெரிக்கப் பொருட்களை புறக்கணிக்கத் தொடங்கியுள்ளதாக சமுக வளைதளங்களில் பதிவுகள் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன. Pepci, Coca Cola, Subway, McDonald’s, KFC உள்ளிட்ட அமெரிக்க தயாரிப்புகளை இந்தியர்கள் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர். இந்தியா மட்டுமின்றி பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளும் ஏற்கெனவே அமெரிக்கப் பொருட்களை புறக்கணிக்கத் தொடங்கியுள்ளன.
உலகளவில் அதிக மக்கள் தொகையுடைய நாடாகவும், 3ஆவது பெரிய பொருளாதார நாடகவும் உருவெடுத்து வரும் இந்தியாவில், இங்கு தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார்.
ஒருவேளை மக்கள் இந்த அமெரிக்கப் பொருட்களை முழுமையாக புறக்கணிக்கத் தொடங்கினால், அமெரிக்க நிறுவனங்களுக்கு இது மிகப் பெரிய நஷ்டமாக அமையும். உதாரணமாக, McDonald’s தாய் நிறுவனம் Westlife FoodWorld 2024-இல் இந்தியாவில் மட்டும் ரூ.2,300 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது 2023-ஐ விட 50% அதிகம். அதேபோல, 2024-இல் PepsiCo நிறுவனம் இந்தியாவில் மட்டும் ரூ.8,877 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஒரு வேளை இதை மக்கள் புறக்கணித்தால், பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு அமெரிக்க நிறுவனங்களுக்கு ஏற்படும். இதனால், அந்த இடத்தை இந்திய நிறுவனங்கள் பிடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.









