பொது

டிரம்ப்பின் அதிரடி அறிவிப்பு.. அதிர்ச்சியில் இந்தியர்கள்!

அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் தங்கி வேலை பார்ப்பவர்களின் இஏடி (EAD) எனப்படும் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணத்தை தானாக நீட்டிக்கும் வசதியை நிறுத்திவைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாட்டவர்கள் தங்கள் வேலைக்கான அனுமதி காலம் முடிந்த பின்னரும், கூடுதலாக 540 நாட்கள் அமெரிக்காவில் பணியாற்ற, முந்தைய பைடன் அரசு நிர்வாகம் அனுமதியளித்திருந்தது. தற்போது, அந்த நடைமுறைக்கு மாற்றாக, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி, விண்ணப்பித்த 180 நாட்களுக்குள் இந்த ஆவணம் புதுப்பிக்கப்படும் என்றும், ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதிக்கு 180 நாட்களுக்கு முன்னதாகவே புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு நெருக்கடியையை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டவர்கள் எத்தனை நாட்கள் அமெரிக்காவில் தங்கி வேலைபார்க்கலாம் என்பது குறித்த விவரங்கள் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேல் தொடர்ந்து தங்க விரும்பினால், அந்த ஆவணத்தை புதுப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அறிக்கையும் வெளியிட்டுள்ளது.

கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள், H-1B, L-1 அல்லது O-1 விசா வைத்திருப்பவர்களுக்கு இந்த ஆவணம் தேவையில்லை. ஆனால் கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் மற்றும் H-1B விசா வைத்திருப்பவர்களை சார்ந்து இருப்பவர்களுக்கு இந்த EAD தேவைப்படும்.

Related Posts