ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல ‘Feel Good’ படம்ன்னு பலரை சொல்ல வச்ச படமா, ‘டூரிஸ்ட் பேமிலி’இருந்தது. ஒரு அறிமுக இயக்குநர் படமென்று யாராலும் சொல்லமுடியாத அளவிற்கு மிக நேர்த்தியாக இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கதில், நடிகர் சசிக்குமார், நடிகை சிம்ரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இந்த ஆண்டு மே 1ம் தேதி வெளியானது. வெளியான நாள் முதலே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், குடும்ப ஆடியன்ஸை தன் பக்கம் இழுத்தது.
ரூ.7 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், ரூ.100 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. படம் வெளியாகி கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில், இப்படம் ரூ.90 கோடி வசூலித்திருப்பதாக, திரைப்படங்கள் குறித்து தரவுகள் வெளியிடும் சாக்நில்க் (sacnilk) நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதலீடு செய்யப்பட்ட தொகையை விட கிட்டத்தட்ட 12 மடங்கு அதிக வசூல்… இந்த கோணத்தில் பார்க்கும்போது, 2025ம் ஆண்டு இந்திய திரைப்பட வரலாற்றில் வேறு எந்த படமும் இந்த அளவிற்கு வசூலிக்கவில்லை என சாக்நில்க் நிறுவனம் கூறுகிறது. அதுவும் டாப் ஹீரோக்கலில் ஒருவரான சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ திரைப்படத்துடன் போட்டிப் போட்டு வசூல் ரேஸில் முதலிடம் பிடித்திருப்பது சினிமா வட்டாரத்தில் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.









