எத்திராஜ் மகளிர் கல்லூரி நிறுவனர் வழக்கறிஞர் வி.எல்.எத்திராஜின் 135வது பிறந்த நாள் விழா (நிறுவனர் நாள்) சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்றது.
பெண் கல்வி கற்பது பாவம் என இருந்த காலத்திலேயே வழக்கறிஞர் எத்திராஜ், பெண்களுக்கென தனியாக கல்லூரியை 1948 ஆம் ஆண்டு தொடங்கினார். அப்போது 96 மாணவியர்களுடன் தொடங்கப்பட்ட எத்திராஜ் கல்லூரி, இன்று 7,800க்கும் மேற்பட்ட மாணவிகளை கொண்டு தமிழ்நாட்டின் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக திகழ்கிறது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் கூறியது, நான் தற்கால தலைமுறையான ஜென்சி தலைமுறையை பற்றி நன்கு அறிந்தவன். மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்தை கையில் எடுக்கக்கூடாது அப்போதுதான் உடலும் மனமும் தூய்மையானதாக இருக்கும் என அறிவுரை வழங்கினார்.
இதில் எத்திராஜ் கல்லூரி அறக்கட்டளையின் தலைவர் வி. எம். முரளிதரன் வரவேற்புரையாற்றினார். நிறைவாக, கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ். உமா கவுரி நன்றி உரையாற்றினார். இந்த விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.









