பொது

Selfie-யால் போகும் இந்திய உயிர்கள்… அதிர்ச்சி தகவல்

உலகளவில் Selfie எடுக்கும் பொழுது நடந்த விபத்துகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Selfie எடுக்கும் பழக்கம் நம்ம அனைவர்கிட்டயும் அதிகரிச்சிட்டு இருக்கு. சாப்பிடும் போது Selfie… வேலை செய்யும் போது Selfie… நடக்கும் போதும் கூட Selfie… இப்படி ஒவ்வொரு நொடியையும் Selfie எடுத்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்வது ஒரு வழக்கமாகி விட்டது. ஆனால்… அந்த ஒரே “Selfie” சில நேரங்களில் பலரின் உயிரையே பறிக்கிறது என்பதே அதிர்ச்சி தர உண்மை. மலை உச்சியில் நின்று எடுக்கப்பட்ட Selfie… ஆற்றங்கரையில் எடுத்த Selfie… ரயில் முன் Selfie… இதனால் பலர் எதிர்பாராத விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவங்கள் அடிக்கடி செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் The Barber Law Firm என்ற தனியார் நிறுவனம், 2014 மார்ச் முதல் 2025 மே மாதம் வரை உலகளவில் நடந்த Selfie விபத்துக்கள் பற்றிய தரவுகளை ஆய்வு செய்து அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியிட்டு இருக்கு. இந்த காலகட்டத்தில் உலகளவில் நடந்த செல்ஃபி விபத்துகளில் அதிகமானது இந்தியாவில் தான்.

இந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 271 விபத்துகள் நடந்துள்ளன. அதில் 214 பேர் உயிரிழந்துள்ளனர், 57 பேர் காயமடைந்துள்ளனர். இதன் அடிப்படையில் உலகளவில் நடந்த Selfie விபத்துகளில் 42.1% இந்தியாவில் நடந்ததாக அந்த அறிக்கை கூறுகிறது.

இந்தியாவைத் தொடர்ந்து, அமெரிக்கா – 37 மரணங்கள், ரஷ்யா – 19 மரணங்கள், பாகிஸ்தான் – 16 மரணங்கள், ஆஸ்திரேலியா – 13 மரணங்கள் பதிவாகி இருக்கு. பல இடங்களில் “செல்ஃபி எடுக்க தடை” விதிக்கப்பட்டிருந்தாலும், அதைக் பொருட்படுத்தாமல், அதன் மீதுள்ள மோகம் பலரின் உயிரை பறிக்கிறது. இதன சரிசெய்ய அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது சமுக ஆர்வலர்களின் கோரிக்கை.

Related Posts