பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்ற இவர், இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.
Expression Queen..
இவர் ”கன்னடத்து பைங்கிளி”, “அபிநய சரஸ்வதி” என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.

“லவ் பேர்ட்ஸ்.. லவ் பேர்ட்ஸ்..” என்ற பாடலில் கண்களை சிமிட்டியபடி அவர் கொடுத்த சுட்டித்தனமான எக்ஷ்ப்ரெஷன்கள் இன்றைய தலைமுறையினரையும் ஈர்க்கும் அழகினை கொண்டது.
“சிட்டு குருவி முத்தம் கொடுத்து”, “உன்னை ஒன்று கேட்பேன்”, “தொட்டால் பூ மலரும்”, “நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்” உட்பட நூற்றுக்கணக்கான பாடல்களில் தன் அபிநயங்களால் பல ரசிகர்ளை சரோஜா தேவி தன்வசப்படுத்தினார்.
வெற்றி நாயகி..
முன்னணி நடிகர்களாக இரு ந்த MGR, சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன், N.T. ராமா ராவ், ராஜ்குமார் உள்ளிட்ட பலருடன் கதாநாயகியாக இவர் நடித்திருக்கிறார். 1955 முதல் 1984 வரை தொடர்ச்சியாக 161 படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து சாதனை படைத்துள்ளார். வயதான பின்பும்கூட நடிகர் சூர்யா நடித்த “ஆதவன்” திரைப்படத்தில் படம்முழவதும் கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

அன்றைய தமிழ் சினிமாவில் MGR-சரோஜா தேவி ஜோடி மாபெரும் வெற்றி படங்களை குவித்தது. அன்பே வா, குடும்ப தலைவன், தாய் சொல்லை தட்டாதே என தொடர்ச்சியாக 26 மெகா ஹிட் திரைப்படங்களை இந்த வெற்றி ஜோடி கொடுத்துள்ளது.

அதே போல சிவாஜி கணேசனுடன், புதிய பறவை, தங்கமலை ரகசியம், பாக பிரிவினை என பல வெற்றிபடங்களில் கதாநாயகியாக சரோஜா தேவி நடித்துள்ளார். புதிய பறவை படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில், சிவாஜி கணேசனிடம் கண்ணீர் ததும்ப, “உங்கள் அன்புக்கு முன்னே என் நடிப்பு தோத்து போச்சு கோபால்” என்று சரோஜா தேவி பேசிய வசனம் இன்றும் க்ளாசிக் வசனமாக இருக்கிறது.

கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் முன்னணி நட்சத்திரங்களுடன் சரோஜா தேவி நடித்த படங்கள் மெகா ஹிட்டாக இருந்துள்ளன. இவரது மறைவால், திரையுலகினர் சோகத்தில் உள்ளனர். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.









