தட்கல் டிக்கெட் புக் செய்ய தெற்கு ரயில்வே புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. அடுத்தடுத்து தொடர்ச்சியா பண்டிகைகள் வரவிருக்கும் நிலையில், பெரும்பாலானோர் தன்னோட சொந்த ஊர்களுக்கு அலைச்சல் இல்லாம போக ரயில் பயணத்தைத்தான் தேர்வுசெய்வர்கள். தட்கல் புக்கிங்கிங்ல் இருக்கும் முறைகேடுகளை தடுக்க ஏற்கனவே ஆதார் சரிபார்ப்பு முறையை ரயில்வே கொண்டுவந்தது. இப்போது கூடுதலாக otp முறையை கொண்டுவந்துள்ளது. இனி நீங்க தட்கல் டிக்கெட் புக் செய்தால், உங்களுக்கு ஒரு OTP வரும். அந்த otpயை சரிபார்த்த பின்னர்தான் டிக்கெட் புக் பண்ண முடியும். இந்த புதிய நடைமுறை website, APP மற்றும் ரெயில்வே கவுண்டர் என எல்லாவற்றிற்கும் பொருந்தும்.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை சென்டிரலில் இருந்து அகமதாபாத் செல்லும் நவ்ஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12656), சென்னை சென்டிரலில் இருந்து ஹவுரா செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12656), சென்னை சென்டிரலில் இருந்து ஹவுரா செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் (12842), சென்னை எழும்பூரில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22160), ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22158) ஆகிய 5 ரெயில்களில் கடந்த 23-ந்தேதி முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது கடவுச்சொல் சரிபார்க்கப்பட்ட பின்னரே டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டு உள்ளது” என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முறை மூலம் மோசடிகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.









