ஜனநாயகத்தின் மூன்றாவது தூணாக சொல்லப்படும் நீதித்துறையில் நடக்கும் ஊழல் குறித்து CBSE 8 ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில் மத்திய அரசு சேர்த்திருப்பது பெரும் சர்ச்சையாக வெடிக்க தொடங்கியுள்ளது.
CBSE பள்ளிகளுக்கான பாடத் திட்டங்களை தயாரிக்கும் பணியை NCERT கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் செய்து வருகிறது. பாடத்திட்டங்களில் பழைய மாடலை நீக்கி புதிய மாற்றங்களும் இணைப்புகளும் செய்து வருகிறது. பின்னர் 2020-ல் புதிய கல்விக் கொள்கை அறிமுகபடுத்தி, அதில் சில மாற்றங்களை NCERT செய்ய தொடங்கியது.
அதன்படி, 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் இடம்பெற்று இருக்கும் “நம் சமூகத்தில் நீதித்துறையின் பங்கு” என்ற பாடத்தில் ஒரு தலைப்பை புதிதாக NCERT சேர்த்துள்ளது. அதில் நீதித்துறை செயல்படுகிறது என்பதை தாண்டி, நீதித்துறை ஊழல் மற்றும் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் பற்றிய சில தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமல்லாமல், சுப்ரீம் கோர்ட்டில் 81,000 வழக்கு, உயர்நீதிமன்றங்களில் 62,40,000 வழக்கு, கீழ்நிலை நீதிமன்றங்களில் 4 கோடிக்கும் அதிகமான வழக்குகளும் நிலுவையில் உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கும் ஒருபடி மேலாக, நீதித்துறையில் உள்ளவர்களுக்கு எதிராக 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரை 1,600 புகார்கள் வந்துள்ளதாகவும், நீதி அமைப்பில் உள்ள ஊழல்களால் ஏற்படும் தாக்கம் குறித்து 2025 ஆம் ஆண்டு அப்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பேசியது அந்த 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஏதோ நீதித்துறையில் மட்டுமே ஊழல் மலிந்து இருப்பது போல திட்டமிட்டு சித்தரிக்க முயற்சி நடப்பதாகவும் உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.
இதனால் மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையேயான புதிய மோதல் தொடங்கி இருப்பதாக பல தரப்பினர் விமர்சனம் பண்ண தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் எதிர்ப்புகள் அதிகரித்து வருவதால், பாடத்திட்டத்தில் இருந்த நீதித்துறையில் ஊழல் என்ற சேப்டரை கொண்டு வந்ததற்கு உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது மத்திய அரசு இது தான் இப்போ டாக் ஆப் தி டவுனே…









