மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், நாசர், நரேன் மற்றும் பலர் நடிப்பில் ‘டிரெயின் ‘ (TRAIN) திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் இசையமைப்பாளராகவும் மிஸ்கின் புது அவதாரம் எடுத்துள்ளார். ‘கன்னக்குழிகாரா’ என்று ஸ்ருதிஹாசன் குரலில் வெளியான பாடலின் முன்னோட்டம் நல்ல வரவேற்பை பெற்றது. ஸ்ருதிஹாசன் பிறந்தநாளிலும், விஜய் சேதுபதியின் பிறந்த நாளிலும் படக்குழு வெளியிட்ட டீசர்கள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் இருந்தன.

படம் குறித்து பெரிய எதிர்பார்ப்பு இருந்துவரும் நிலையில், ஒரு விழாவில் படத்தின் கதைக்கருவை இயக்குநர் மிஸ்க்கின் விவரிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு ராட்சச புழுவுடன் ரயிலை ஒப்பிட்டு பேசிய அவர், வாழ்வை வெறுத்த ஒருவனின் மனதை ஒரு ரயில் பயணம் எப்படி மாற்றியது என்பதே டிரெயின் படத்தின் கதை என்று மிஸ்க்கின் சஸ்பென்ஸை உடைத்துவிட்டார். இது அவருடைய ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. A Man called Otto, DUNE என்ற இரண்டு படங்களை தழுவி இந்த படத்தின் கதை இருக்கிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. ஒரு சிலர், இதுதான் மிஸ்க்கினின் நம்பிக்கை, படம் நிச்சயம் சிறப்பாக இருக்கும் என்று நம்பிக்கையாக கமெண்ட் செய்துள்ளனர்.









