பொது

டிரெண்டாகும் இளையராஜாவின் ‘கிளியே, கிளியே’ பாடல்! காரணம் என்ன தெரியுமா?

இளையராஜாவும் இசையும் பிரிக்க முடியாத ஒன்று என பலர் சொல்லிக் கேட்டிருப்போம். அவரின் பாடல்கள் எப்போதும் பட்டையை கிளப்பும். பழைய பாடல்கள் கூட, புதிய படங்களில் ஒரு scene-ல் வந்தாலே அதே நாளே வைரலாகிவிடுகிறது. இதே போல் சமீபத்தில் வெளியான லோகா என்ற படத்தின் மூலம் மறுபடியும் “கிளியே, கிளியே” பாடல் வைரலாகி வருகிறது.

தமிழ் ரசிகர்களுக்கு பழைய பாடல்கள் ரீ-என்ட்ரி எப்போவும் special தான். உதாரணமாக, Vikram படத்தில் வரும் சக்கு சக்கு வத்திகுச்சி பாடல், Leo படத்தில் வரும் கரு கரு கருப்பாயி, குட் பேட் ஆக்லி படத்தில் தோட்டு தொட்டு பேசும் சுல்தானா, ஒத்த ரூபா, Lubber Pandhu படத்தில் பொட்டு வெச்சா, சமீபத்தில் தமிழில் Blockbuster ஆன Tourist Family படத்தில் மலையுரு நாட்டாமை பாடல் என பட்டியல் மிக பெரியது. இந்த திரைப்படங்கள் வெளியாகும் பொழுது அந்த பாடல்களும் சமூக வலைதளங்களில் வைரலாகுகின்றன.

பாடல்

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளியான “லோகா” படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் நடித்த இந்த திரைப்படம், மலையாளத்தில் பெண் சூப்பர் ஹீரோவை மையமாக கொண்டு வெளியான முதல் திரைப்படமாகும். இப்படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஒரு காட்சியில் அழகாக காஸ்ட்யூமில் நடந்து வரும்போது, பின்னணியில் “கிளியே, கிளியே” பாடல் இடம்பெற்றிருந்தது. இதனால் ரசிகர்கள் விசில் அடித்து, திரையரங்குகளில் ஆரவாரம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த காட்சியும் இந்த பாடலும் தற்பொழுது Instagram, YouTube என சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

Related Posts