பொது

41 பேரின் உயிரைக் குடித்த கரூர் துயரம்… Timeline

நேரம்                              நிகழ்வு

Sep 27,2025

காலை 9:00                 விஜய்யின் வருகைக்காக மக்கள் கூட்டம் குவியத் தொடங்கியது. அனுமதிக்கப்பட்ட அளவான 10,000 பேருக்கும் அதிகமாக, 25,000 முதல் 30,000 பேருக்கும் மேல் திரண்டிருந்ததாகக் காவல் துறை தெரிவிக்கின்றன. மக்கள் சுமார் ஆறு மணி நேரம் உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவுமில்லாமல், சுட்டெரிக்கும் வெயிலிலும், பின்னர் இருளிலும் காத்திருந்தனர். இதனால், விஜய் வருவதற்கு முன்பே பலர் மயங்கி விழத் தொடங்கினர்.

பிற்பகல் 12:45           கரூர், வேலுசாமிபுரத்தில் உள்ள கரூர்-ஈரோடு மாநில நெடுஞ்சாலையில் இந்தப் பொதுக்கூட்டம் தொடங்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

மாலை 7:00                நாமக்கல்லில் தனது பரப்புரையை முடித்துவிட்டு வர தாமதமானதால், விஜய் சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேல் தாமதமாகப் பிரச்சார இடத்திற்கு வந்தடைந்தார். விஜய்யின் வருகைக்காக ஆதரவாளர்கள் கட்டுக்கடங்காமல் முண்டியடித்தனர். இந்தக் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாமல் நிலைமை மோசமடைந்தது. கூட்டத்தின் அளவு அதிகரித்ததால், மக்கள் அருகிலிருந்த டீக்கடைகளின் தகரக் கூரைகள், மரங்கள் மற்றும் கட்டிடங்கள் மீது அபாயகரமாக ஏறி நின்றனர். தாங்க முடியாத பாரம் காரணமாக சில தகரக் கூரைகள் உடைந்து விழுந்தன, ஒரு மரக்கிளையும் முறிந்து விழுந்தது.

இரவு 7:30                   விஜய் பேசத் தொடங்கிய பின்னரும், கூட்ட நெரிசலும், மூச்சுத் திணறலும் அதிகரித்ததால் மக்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இந்தச் சூழலைக் கண்ட விஜய், உடனடியாகத் தனது பேச்சை நிறுத்திவிட்டு, கூட்டத்தின் மீது தண்ணீர்ப் பாட்டில்களை வீசி, நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்றார். மயங்கி விழுந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கள் அழைக்கப்பட்டன. எனினும், கடுமையான நெரிசல் காரணமாக ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டது.

இரவு 8:00                  நிலைமை கைமீறிப் போனதையடுத்து, விஜய் தனது பேச்சை விரைவாக முடித்துக்கொண்டு கிளம்பினார். அவர் கிளம்பும்போது அவரது வாகனத்தைப் பின்தொடர ஆதரவாளர்கள் முண்டியடித்ததாலும், அதேசமயம் கூட்டத்தினர் அங்கிருந்து கலைந்து செல்ல முற்பட்டதாலும் நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது.

இரவு 9:30                 இந்தச் சம்பவத்தில் ஆரம்பத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தடுத்து பலி எண்ணிக்கை 36ஆக அதிகரித்தது, மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்துவந்தனர்.

Sep 27,2025              உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ₹10 லட்சம் நிவாரணத் தொகையை அறிவித்தார்.

Sep 27,2025              தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹20 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

Sep 28,2025              பிரச்சாரம் முடிந்த அடுத்த  நாளிலில் பலி எண்ணிக்கை 39ஆக அதிகரித்தது.

Sep 28,2025             இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது.

Sep 29,2025              உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

இதில் பலியானவர்களில் குழந்தைகளும், பெண்களும் அடங்குவர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் கரூர் மற்றும் திருச்சியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 

 

 

Related Posts