சமீபத்தில் Institute for Science and International Security வெளியிட்ட படங்கள் உலக நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகைப்படங்களில் என்ன இருந்தது? ஈரான் தனது அணுசக்தி மையங்களை நிலத்திற்கடியில் புதைத்து பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது.
தேஹ்ரானுக்கு அருகிலுள்ள Parchin பகுதியில் புதிய கட்டிடம் ஒன்று கான்கிரீட்டால் மூடப்பட்டு, அதன் மேல் மண் கொட்டப்படுகின்ற புகைப்படம் தெளிவாக பதிவாகி இருந்தது. இது வான்வழி தாக்குதல்களில் இருந்து அணுசக்தி மையங்களை காப்பாற்ற நிலத்தடியில் பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதாக ஈரான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் Natanz Nuclear Facility மற்றும் Isfahan Nuclear Technology Center பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரித்து இருக்கு ஈரான்.
இதுமட்டுமல்லாமல், 2025ஆம் ஆண்டு ஜூலை முதல் கைவிடப்பட்ட விமான எதிர்ப்பு பீரங்கி தளங்களை ஈரான் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்து இருக்கு. மேலும், சில பகுதிகளில் ரகசியமாக ‘யுரேனியம் செறிவூட்டல்’ நடைபெறுவதாகவும், அதனால் அணு ஆயுதத் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.
சமீப நாட்களில் Iran மற்றும் United States இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. முழு அளவிலான போர் நிலைமை இல்லைனாலும் இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி எச்சரிக்கைகள் விடுத்து வருகின்றன.
இந்த சூழலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருப்பது, வரும்நாட்களில் ஏதாவது தாக்குதல் ஏற்பட்டால் அதற்கான முன்னெச்சரிக்கையாக ஈரான் இந்த மாற்றங்களை செய்து வருவதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஒருவேளை இந்த இரண்டு பெரிய நாடுகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டால், அதன் தாக்கம் எண்ணெய் விலை, உலக பொருளாதாரம் மற்றும் நமது அன்றாட வாழ்க்கையில் வெளிப்படையாக தெரியும்.









