இஸ்ரேல்–ஈரான் போர் காரணமாக, இந்தியாவில் இருந்து ஈரானுக்கு அனுப்பப்படும் பாஸ்மதி அரிசி சுமார் 1 லட்சம் டன் அளவில் துறைமுகங்களில் தேக்கமடைந்துள்ளது. கப்பல் வசதிகள் இல்லாததால் ஏற்றுமதியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிதி இழப்புகளும், உள்நாட்டில் பாஸ்மதி அரிசி விலைகள் வீழ்ச்சி அடையும் அபாயமும் நிலவுகிறது.
இதுகுறித்து பேசிய அகில இந்திய அரிசி ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சதீஷ் கோயல், “இந்தியாவின் மொத்த பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் 18–20% ஈரானுக்கே அனுப்பப்படுகிறது. இஸ்ரேல்–ஈரான் மோதலால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, ஈரானுக்கு அனுப்பப்பட்ட சுமார் 1,00,000 டன் பாஸ்மதி அரிசி இந்திய துறைமுகங்களில் தேக்கமடைந்துள்ளது. மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக, இக்கப்பல்களுக்கு காப்பீட்டு வசதி கிடைக்கவில்லை. இதன் விளைவாக, உள்நாட்டுப் பாஸ்மதி அரிசி விலைகள் கிலோவுக்கு ₹4 முதல் ₹5 வரை குறைந்துள்ளன” என்று அவர் தெரிவித்தார்.

பாஸ்மதி அரிசிக்கு பெயர் போன நாடுகளில், சவூதி அரேபியாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. குறிப்பாக, 2024-25 நிதியாண்டில் இந்தியா மொத்தமாக ஏற்றுமதி செய்த 60 லட்சம் டன் பாஸ்மதி அரிசியில் ஈரானுக்கு மட்டும் சுமார் 10 லட்சம் டன் பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது. இதில் பெரும்பாலான அளவு மிடிலீஸ்ட் மற்றும் மேற்கு ஆசியா நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகியவையும் முக்கியமான ஏற்றுமதி நாடுகளாக உள்ளன.
கடந்த சில மாதங்களாக இஸ்ரேல்–ஈரான் இடையே நடைபெரும் போர் காரணமாக, இரு நாடுகளும் திப்பற்றி எரிந்து கொண்டுள்ளன. முக்கிய பகுதிகள்—ஈரானின் விமான நிலையங்கள், இஸ்ரேலின் மொசாட் தலைமையகம் என ஏராளமான பகுதிகள் தரைமட்டமானது.

தற்பொழுது இந்த போரில், அமெரிக்கா நேரடியாக தலையீட தொடங்கியுள்ளது. இதனால் போர் இன்னும் வலுவடைய வாய்ப்புள்ளது. இந்த போர் காரணமாக இந்திய பாஸ்மதி அரிசி ஏற்றுமதியாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதை எதிர்கொள்ள மத்திய அரசின் ஆதரவு மிகவும் அவசியம் என்று அனைத்து இந்திய அரிசி ஏற்றுமதியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.









