பொது

மேம்படுத்தபட்ட  சித்தேரி தாங்கல் ஏரி

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் உள்ள சித்தேரி தாங்கல் ஏரியை மேம்படுத்த தூர்வாரும் பணி, நடைபாதை அமைப்பு, ஸ்டோன் பெஞ்ச் உள்ளிட்ட திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று (18.09.25) ஒப்படைத்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் மேலாண்மை மற்றும் இந்த பகுதி மக்களின் நலனை மேம்படுத்துவத்துவதற்காக எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்பு மற்றும் கோனே இந்தியா ஆகிய நிறுவங்கள் இனைத்து இந்த திட்டத்தை தொடங்கியுள்ளது.

இதில் பேசிய எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அறக்கட்டளையின் தலைவர் எஸ். செந்தூர் பாரி, “மழை வெள்ளத்தை தடுக்க நீர்நிலைகள் அவசியம். சென்னைக்காக மட்டும் இதுவரை 14,000 கோடி ரூபாய் அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது,” என்றார்.

பின்னர் சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் பேசியதாவது: “அரசு எவ்வளவு திட்டங்கள் கொண்டு வந்தாலும், அமைப்புகள், சங்கங்கள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம்.”

ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி. ஸ்ரீதேவி தனது உரையில், “சித்தேரி தாங்கல் ஏரி போன்றவை நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதிலும், வெள்ளத்தைத் தடுப்பதிலும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. எக்ஸ்னோரா இன்டர்நேஷனலின் முயற்சிகளுக்கும், கோனே இந்தியாவின் முக்கிய திட்டங்களுக்கும் எனது பாராட்டுகள்,” என தெரிவித்தார்.

கோனே இந்தியாவின் மூத்த இயக்குநர் எஸ். ரவீந்திரன் கூறியதாவது, “தமிழகத்தில் முக்கிய பிஸினஸ்களை செய்கிறோம். இங்கு இயற்கை வளங்களை மீட்டெடுக்கும் திட்டங்களை செய்வது எங்களுக்கு சந்தோஷமாக உள்ளது.” என்றார்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது சித்தேரி தாங்கல் ஏரி மேம்பாட்டுத் திட்டம். இதன் மூலம் அந்தப் பகுதியில் நீர் வளங்களை மீட்டெடுக்கவும், பருவநிலை சவால்களை எதிர்கொள்ளவும் முடியும். முன்பு இந்தக் குளத்தில் குப்பைகள் கொட்டப்பட்டதால் மோசமான துர்நாற்றம் வீசியது. தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளதால், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுக்கப்படும் என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கோனே இந்தியாவின் உதவி மேலாளர் ஜி. பிரதீப் குமார், கோனே இந்தியாவின் சென்னை துணை பொது மேலாளர், தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Posts