பொது

AI சைபர் குற்றங்களில் இருந்து நீங்கள் தப்பிப்பது எப்படி?

தினமும் ஆயிரக்கணக்கில் இந்தியா முழுவதும் சைபர் குற்றங்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. அதில் கோடிக்கணக்கில் பணம் தினமும் காற்றோடு காற்றாக மறைந்து போகிறது. நீங்கள் என்றாவது சிந்தித்து பார்த்ததுண்டா, இந்த AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் எப்படி நம்மை தேர்ந்தெடுக்கிறார்கள், எப்படி தாக்குகிறார்கள்? இதைப் பற்றி தெரிந்தால், இதில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் அல்லவா? இதோ, அதனை கண்டுபிடிக்க சில எளிய வழிமுறைகள்.

முதலில், யார் இந்த AI சைபர் குற்றவாளிகள்? சமீபத்தில் உலகம் முழுவதும் ட்ரெண்டாகி வரும் கிப்லி ஆர்ட், AI மூவி, ஆட்டோ டிரைவிங் கார்கள் என திரும்பும் பக்கம் எல்லாம் AI நம் நிழலாக மாறிவிட்டது. இதில் பல நன்மைகளும் சில தீமைகளும் உள்ளன. இதுபோன்ற AI உதவியோடு தகவல்கள் மற்றும் பணங்களை திருடுவதே இவர்கள் முக்கிய நோக்கம். சமீபத்தில் கிடைத்த தகவல்படி, உலகளவில் AI சைபர் குற்றவாளிகளின் கவனம் 87% வணிகத்தில் திரும்பியிருக்கிறது. ஆண்டுதோரும் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாக்க $10.5 டிரில்லியன் வரை உலகம் முழுக்க செலவு செய்யப்படுகிறது. இது உலக அளவில் அமெரிக்கா, சீனாவுக்கு பிறகு மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இருக்கும். இது 2030 ஆம் ஆண்டுக்குள் $15.5 டிரில்லியனாக மாறலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இவை அனைத்தும் எங்கிருந்து தொடங்குகிறது என்று சற்று சிந்தித்து பாருங்கள். ஒரு நாள் காலையில் எழுந்தவுடன், உங்கள் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் வந்துவிட்டதாக குறுஞ்செய்தி வந்தால் — நீங்கள் என்ன செய்வீர்கள்? அனைவரும் அதை அடையவேண்டும் என யோசிப்போம். இந்த பேராசைதான் அவர்களுடைய ஆயுதம். ஸ்பேம் இமெயில்கள், டீப்ப்ஃபேக், செயற்கையாக உருவாக்கப்பட்ட

படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை பயன்படுத்தி நமக்கு நெருங்கிய உறவுகள் போல தொடர்பு கொண்டு, இத்தகைய குற்றங்களில் நம்மை சிக்க வைக்கின்றனர். இதற்கு இவர்கள் Ghost GPT, AI மேம்படுத்தப்பட்ட ஹேக்கிங், OTP BOT, Adversarial AI போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர்.

இந்த தாக்குதல்களில் இருந்து உங்களை பாதுகாக்க, சில சிறிய மாற்றங்கள் உதவும். “முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்” என்பது இதற்கு சரியாகப் பொருந்தும் — அதாவது AI உதவியோடு நம்மை தாக்கினால், அதே AI-யை பயன்படுத்தி நம்மை பாதுகாக்கலாம். Darktrace AI – நெட்வொர்க்கில் நடக்கக்கூடிய தாக்குதல்களில் இருந்து தடுக்க, Google Safe Browsing + AI – கூகுளில் உள்ள போலி இணையதளங்களை கண்டுபிடித்து எச்சரிக்கை அளிக்கும், Microsoft Defender with AI – கணினியில் நடக்கும் ஒவ்வொரு நகர்வையும் கண்காணித்து, சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும். இதைத் தவிர CrowdStrike Falcon, Symantec Endpoint Protection with AI போன்ற ஏராளமான பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளன. இதனைத் தொடர்ந்து, இணையத்தில் எதை பகிர்கிறோம் என்பதில் கவனம் தேவை. பொதுவாக பயன்படுத்தும் இரட்டை அடையாள ஆதண்டிகேஷன் (Two-Factor Authentication) பயன்படுத்துவது, வலுவான பாஸ்வேர்டு போன்றவை கட்டாயமாக பயன்படுத்த வேண்டியவை ஆகும்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts