பொது

கொரோனா தடுப்பூசியால் திடீர் heart attackஆ?

இளம் வயதினருக்கு திடீர் மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணம் குறித்து கர்நாடக அரசு ஆய்வு நடத்தியுள்ளது.

கர்நாடகவின் ஹாசன் மாவட்டத்தில், கடந் த 40 நாட்களில் 45 வயதுக்குட்பட்ட 23 பேர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். அதேப்போல் கதக் மாவட்டத்திலும் 20-க்கும் மேற்பட்டோர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தனர். கொரோனா தடுப்பூசியால் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பதாக வதந்திகள் பரவியதால், இதய பரிசோதனைக்காக மருத்துவமனைகளுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்தனர். இதனால் பல இடங்களில் சர்ச்சை ஏற்பட்டது.

இதையடுத்து, திடீர் உயிரிழப்புகள் குறித்து ஆய்வு நடத்த அம்மாநில அரசு 10 மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்தது. கர்நாடக சுகாதரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவிடம் இக்குழு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அந்த அறிக்கையில், கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு, இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பாதிப்பிற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிக்கை உறுதி செய்துள்ளது.

மேலும், கொரோனா தொற்று ஏற்பட்டு இப்போது குணமடைந்திருந்தாலும், அவர்களில் பலருக்கு நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்யின் தாக்கம் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது. திடீர் மாரடைப்புகளுக்கு இதுவும் ஒரு காரணம் என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ குழுவின் அறிக்கையின் எதிரொலியாக, இளம்வயதில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தால், அவரது உடலை கட்டயமாக பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அம்மாநில அமைச்சர் தினேஷ் குண்டுராவ் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் திடீர் மாரடைப்பு உயிரிழப்புகளுக்கான உண்மையன காரணத்தை கண்டுபிடிக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts