பொது

தப்பிய 7 விமான நிலையங்கள்… இந்தியா மீது சைபர் தாக்குதல்!

கடந்த சனிக்கிழமை இந்தியாவின் முக்கியமான விமான நிலையங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 7 விமான நிலையங்களில் சுமார் 388 விமானங்கள் தொழில்நுட்ப கோளாறின் காரணமாக பாதிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, இந்த 7 முக்கிய விமான நிலையங்கள் GPS Spoofing மூலம் சைபர் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டதாக மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது.

GPS Spoofing என்றால் என்ன?

நாம் கூகுள் மேப்பில் எப்படி வேகம், திசை, செல்லும் நேரம் போன்ற அனைத்தையும் தெரிந்துகொள்கிறோமோ, அதேபோல் விமானங்களும் செயற்கைக்கோள்களிடம் இருந்து GPS signal-களை பெறுகின்றன. சில நேரங்களில் இந்த signal சரியாக கிடைக்காமல் போகலாம். அதை சரிசெய்ய Spoofer போன்ற transmitter device-கள் பயன்படுத்தப்படுகின்றன. இது குறிப்பாக விமானங்கள் தரையிறங்கும் நடைமுறைகளின் போது, குறிப்பாக GPS-ஐ நம்பி இயங்கும் runway-களில் மிகவும் முக்கியமானதாகும்.

விமானப் போக்குவரத்தில் நடைபெறும் டிஜிட்டல் தாக்குதல்களில் மிக ஆபத்தான ஒன்று GPS Spoofing. இதில், விமானங்களுக்கு கிடைக்கும் GPS தகவலை மாற்றி, விமானத்தின் நிலை (position), வேகம் அல்லது நேரம் பற்றிய தவறான தகவல்கள் கொடுக்கப்படலாம். இந்த சம்பவத்தில், சில விமானங்களில் GPS செயல்படாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எந்த விமானமும் ரத்து செய்யப்படவோ அல்லது மாற்றுப்பாதைக்கு திருப்பிவிடப்படவோ இல்லை. இது GPS Spoofing மூலம் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் என மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

எந்த விமான நிலையங்கள் பாதிக்கப்பட்டன?

இந்தியாவின் மிகவும் பரபரப்பான மையங்களில் சைபர் சம்பவங்கள் கண்டறியப்பட்டன. டெல்லி – IGI விமான நிலையம், மும்பை விமான நிலையம், பெங்களூரு விமான நிலையம், ஹைதராபாத் விமான நிலையம், கொல்கத்தா விமான நிலையம், (மேலும் இரண்டு விமான நிலையங்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை)

இதுகுறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது, “பாதிக்கப்பட்ட அனைத்து விமான நிலையங்களையும் சிறப்பு சைபர் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளோம். தாக்குதலின் காரணத்தை கண்டறிய DGCA, BCAS மற்றும் விமான நிலைய Chief Information Security Officers புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.”

Related Posts