பொது

தப்பித்தவறி கூட இந்த பொருட்களை இந்த நாடுகளுக்கு எடுத்துட்டு போகாதீங்க!

மலையாள நடிகை நவ்யா நாயர் சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்றபோது, அவரின் தலையில் வைத்திருந்த மல்லிகைப் பூ காரணமாக அவருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து அவர் தனது இண்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதற்கு ஒரு மல்லிகைப்பூவுக்கு ஒரு லட்சம் அபராதமா? என மக்கள் கேள்வி எழுப்பு வருகின்றனர்.

இந்த

ஆனால் இது ஆஸ்திரேலியாவில் சட்டம். ஆனால் இது ஆஸ்திரேலியாவின் சட்டம். இந்த சம்பவம் நமக்கு ஒரு கேள்வியை எழுப்புகிறது – இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் பூக்கள், உணவுப் பொருட்கள் போன்றவற்றை ஏன் சில நாடுகள் எடுத்து செல்ல தடை உள்ளது தெரியுமா?… பல காரணங்களால் பல வகையான பொருட்களுக்கு அந்த நாடுகளுக்குள் எடுத்து செல்ல தடை விதிக்கின்றன. இந்த தடைக்கு முக்கிய காரணம் நோய்கள், பூச்சிகள் பரவக்கூடும் மற்றும் அந்த நாட்டு பொருளாதார சூழல் பாதிக்கப்படும் என்பது தான்.

முதலில் இந்த சம்பவம் நடந்த ஆஸ்திரேலியாவில் இருந்தே பார்போம். இங்கு பூக்கள், பழங்கள், காய்கறிகள், மூலிகைகள், மசாலா பொருட்கள், தானியங்கள், விதைகள், உணவு பொருட்கள், செல்லப் பிராணிகளுக்கான உணவு என பல பொருட்களை எடுத்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களை எடுத்துசென்றால் அபராதம் விதிக்கப்படும்.

இதை விட சில நாடுகளில் உள்ள தடை நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. ஜாப்பானில் அலர்ஜி மற்றும் சைனஸ்க்கான மருந்துகள் எடுத்துச் செல்ல தடை உள்ளது. இதில் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் விக்ஸும் உண்டு.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் நியூசிலாந்திலும் புதிய பூக்கள் எடுத்து செல்லவும் இறக்குமதி செய்யவும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது. சில குறிப்பிட்ட பூக்கள் அல்லது செடிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பூக்களுக்கு பூச்சி சான்றிதழ் தேவைப்படும்.

இதை விட நேபாளத்தில் சற்று விதியாசம். அங்கு காதலர் தினத்திற்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து வரும் ரோஜா பூக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Posts