வணிகம்

வெள்ளியில் சீனா விதித்த கட்டுப்பாடு! இந்தியாவுக்கு பேரடி

உலகப் பொருளாதாரம் இன்று வெறும் எண்ணிக்கைகளில் மட்டும் திர்மானிக்க படுவதில்லை, அரசியல் முடிவுகள், வரி, வணிகப் போட்டி என அனைத்தும் சேர்ந்து, சாதாரண மக்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதுக்கு உதாரணமாக, ஜனவரி மாதம் முதல் வெள்ளி ஏற்றுமதி கட்டுப்பாடுகள் அமல்படுத்தியுள்ளது சீனா.

இந்த கட்டுபாட்டுக்கு பிறகு தொழில்துறை உலோகமாக இருந்த வெள்ளி, இப்போ “அரியவகை கனிமம்” பட்டியலில் சேர்க்கபட்டு இருக்கு. இதனால் உலக சந்தையில் முக்கிய மாற்றங்கள் எற்பட உள்ளது. குறிப்பாக இந்தியா போன்ற வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளுக்கு நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

2024 அக்டோபரில் சீன அறிவித்த வெள்ளி ஏற்றுமதி கட்டுப்பாடு, ஜனவரி முதல் அமலுக்கு வந்தது. இதில் வெள்ளி ஏற்றுமதிக்கு முழுமையான தடை விதிக்கப்படவில்லை. ஆனால், 44 நிறுவனங்களுக்கு மட்டும் ஏற்றுமதி உரிமம் வழங்கி, ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களை அதிரடியாக குறைத்து இருக்கு அந்த நாட்டு அரசாங்கம். இதுதான் தற்பொழுது வெள்ளி விலை அதிரடியாக உயர முக்கிய காரணமாக இருக்கு.

உலக வர்த்தக சந்தையின் வெள்ளியின் தற்போதைய நிலை, உற்பத்தி மற்றும் எற்றுமதியில் சீனா எந்த அளவுக்கு வளுவாக உள்ளது என்பதை கட்டுகிறது.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை சீனாவில் இருந்து 4,600 டன் வெள்ளி ஏற்றுமதி செய்யபட்டுள்ளது. அதே சமயம் சீனா இறக்குமதி செய்துள்ள வெள்ளி வெரும் 220 டன் மட்டும்தான். 1979க்கு பிறகு 2025ஆம் ஆண்டில் மட்டும் 150% வரை வெள்ளி விலை உயர்ந்துள்ளது. இந்த வெள்ளியின் விலையேற்றம் உலகப் பொருளாதாரத்தில் பெரிய அழுத்தத்தை எற்படுத்தலாம் என நிபுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவுக்கு என்ன தாக்கம்?

இந்தியாவின் மின்னணு உற்பத்தி, EV, மருத்துவ சாதனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் வெள்ளி ஒரு அத்தியாவசிய மூலப்பொருள் பயன்படுது. 2030க்குள் இந்தியாவின் 500 GW சோலார் திறன்தான் இலக்கு. அப்படி இருக்க ஒரு GW சோலார் மின் உற்பத்தி செய்ய 20–25 டன் வெள்ளி தேவைப்படும். ஒரு வேலை சீனாவிலிருந்து வரும் வெள்ளி குறைந்தால், உற்பத்திச் செலவுகள் அதிகரிக்கும். இதன்மூலம் சோலார் திட்டங்கள் தாமதமடைய வாய்ப்பு உள்ளது. இது கடைசியில் மின்சார விலை நேரடி அழுத்த எற்படுத்தும். இது முதலில் தொழிற்சாலைகளில் பெரிய தாக்கத்தை எற்படுத்தினாலும் முதலில் சாதாரண குடும்பங்களின் மின் பில்லில் தான் எற்படுத்தும்.

இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான MSME மற்றும் உதிரிபாக உற்பத்தி நிறுவனங்கள், சீனாவிலிருந்து கிடைத்த வெள்ளியை பெரிதும் சார்ந்துதான் செயல்பட்டு வந்துள்ளன. ஒரு வேலை முன்கூட்டியே மூலப்பொருள் வாங்காமல் இருந்து இருந்தால், உற்பத்தி அளவு குறைவு தொடங்கும், இதனால் லாப மற்றும் வேலைவாய்ப்புகள் குறையும். இது பங்குச் சந்தை சார்ந்த சிக்கல் மட்டுமல்ல; தொழிலாளர்களின் தினசரி வருமானத்தையும் நேரடியாக பாதிக்கும்.

இந்தியாவில் தங்கம் வெள்ளி என்பது வெறும் உலோகம் மட்டும் அல்ல. அது திருமண சடங்கு, கோவில் வழிபாடுகள், சேமிப்பு என தினசரி வாழ்கையில் ஒன்றாக உள்ளது. வெள்ளி விலை இன்னும் உயர்ந்தால், வெள்ளி நகை வாங்குவது குறையும். சிறு நகரங்கள், கிராமப்புறங்களில் விற்பனை சரிவு தொடங்கும்.

சீனாவிலிருந்து வெள்ளி விநியோகம் குறைந்தால், லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆஸ்திரேலியா போன்ற மாற்று நாட்டு சந்தையை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். இதன் விளைவாக இறக்குமதி செலவு அதிகரிக்கும், வர்த்தக அழுத்தம், ரூபாய் மதிப்பு சரிய தொடங்கும். சீனாவின் இந்த வெள்ளி ஏற்றுமதி கட்டுப்பாடு, இந்தியாவுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

Related Posts