பொது

பொறியியல் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு: Choice filling-ல் இந்த தப்ப மட்டும் பண்ணிடாதீங்க

B.E, B.Tech, பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் இன்று (ஜூன் 27) வெளியிட்டார்.

தமிழகத்தில் கடந்த மே 8 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் வெளியானது. இதன் பின் மணவர்கள் தங்கள் விரும்பும் கல்லுரிகளில் சேர் தொடங்கின. இதனை தொடர்ந்து தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சேர் ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த மே 7 ஆம் தேதி தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி முடிவடைந்தது. அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளுக்கும் இந்த கலந்தாய்வு மூலமே தான் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்தக் கல்லூரிகளில் B.E, B.Tech. படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள், அரசு ஒதுக்கீட்டு இடங்களாகும். 2025-26 கல்வி ஆண்டில் 3,02,374 பேர் பொறியியல் கலந்தாய்விற்கு (counselling) விண்ணப்பித்திருந்தனர். அதில் 2,50,298 மாணவர்கள் பதிவு கட்டணம் செலுத்தினர். இதில் விண்ணப்பித்த அனைவருக்கும் ரேண்டம் எண் ஒதுக்கப்பட்ட நிலையில், 2,50,298 மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. இதில் 2,41,641 பேர் தகுதி பெற்றனர்.

அவர்களின் சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம் சரிபார்க்கப்பட்டு ஜூன் 11 ஆம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், இன்று (ஜூன் 27) B.E, B.Tech, பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் வெளியிட்டார். தரவரிசைப் பட்டியலில், 145 பேர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களில் 140 பேர் தமிழ்நாடு பாடவாரியத்தின் கீழ் படித்தவர்கள்.

மேலும் அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ் 54,000 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த மாணவர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு 7.7.2025 முதல் 11.7.2025 வரை நடைபெறும், பொது பிரிவினருக்கான கலந்தாய்வு 14.7.2025 – 19.8.2025 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தரவரிசை பட்டியலை https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளளாம்.

engineering-counselling-college

இந்த நிலையில் choice filling செய்வது எப்படி?

பொறியியல் கவுன்சலிங்கில் முக்கியமான பகுதி choice filling தான். இதில் எதாவது தவறு செய்தால், கஷ்டப்பட்டு படித்து நல்ல மதிப்பெண் பெற்றவர்களுக்கும் சுமாரான கல்லூரிகளில் படிக்க நேரிடும். விரும்பிய கோர்ஸை படிக்க முடியாமல் போகும் வாய்ப்பும் உள்ளது. நீங்கள் தேர்வு செய்யும் Course முக்கியம் தான். ஆனால், இங்கு சிலருக்கு சந்தேகம் ஏற்படும் கோர்ஸூக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமா? அல்லது கல்லூரிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமா?. முதலில் டாப் கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம். முதலில், டாப் கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம். ஏனெனில் அந்த கல்லூரிகளில் Placement அதிகம் இருக்கும். சில கல்லூரிகளில் Course சிறப்பாக இருந்தாலும், Placement இருக்காது. எனவே, இதனை தெளிவாக விசாரித்து choice filling பண்ணுவது நல்லது.

டாப் கல்லூரிகளில் உள்ள எல்லா கோர்ஸ்களையும் Choice List வைத்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட சில கல்லூரிகளில் சில கோர்ஸ்கள் சிறப்பாக இருப்பதால், அதற்க்கு விருப்பப்பட்டால் முன்னுரிமை அளிக்கலாம். SC, ST Scholarship தகுதி உள்ள மாணவர்களுக்கு seat கிடைக்க வாய்ப்பு அதிகம். எனவே, கவுன்சலிங் மூலமாகவே சேர்வது நல்லது. இதுபோல், முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கும் Scholarship வழங்கப்படும். Scholarship கிடைக்கிறது”, “Seat இலவசம்” என்று கூறப்படும் சுமாரான கல்லூரிகளில் சேர்வதை தவிர்க்க வேண்டும் என்பது கல்வி அலோசர்களில் அறிவுரை.

Related Posts