தமிழ் திரைவுலகில் தற்போது உச்சபட்ச நடிகர்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களின் படங்கள் வெளியானால், ரசிகர்களுக்கு அது ஒரு திருவிழா தான்.
ஆனால் இப்போ, இவர்கள் இருவரும் சினிமாவுக்கு அப்பால் வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஒரு பக்கம் விஜய் நேரடியாக அரசியலில் களம் இறங்கி பரபரப்பை கிளப்பி வருகிறார். மறுபுறம் அஜித், ரேசிங்கில் முழுமையாக கவனம் செலுத்து வருகிறார். கார் ரேசிங்கில் இந்தியா சார்பில் போட்டியிட்டு, வெற்றிகளை தட்டி செல்கிறார் “தல”.
இந்த நிலையில், சமீபத்தில் இணையத்தில் ஒரு வீடியோ வைரலானது. அது என்ன தெரியுமா?
ஆட்டோகிராப் வாங்க ரசிகர்கள் வரிசையில் காத்திருக்க, அஜித் குமார் ஒரு சிறுவனிடம் ஆட்டோகிராப் வாங்குகிறார். இதனை பார்த்த ரசிகர்களுக்கு, “யார் அந்த பையன்?” என்ற கேள்வி எழுந்துள்ளது.

அந்த சிறுவனின் பெயர் ஜேடன் இமானுவேல். 13 வயதான சென்னையைச் சேர்ந்த இவர், தன்னோடைய 10 வயதிலிருந்தே MINI GP எனப்படும் பைக் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். இது மட்டும் இல்லாமல், ஐரோப்பாவில் நடைபெற்ற MINI GP ரேஸில் மூன்று சீசன்களையும் வெற்றிகரமாக முடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அடுத்த கட்டமாக, ஸ்பெயினில் நடைபெறவிருக்கும் MiniGP World 2025 இறுதி போட்டியில் பங்கேற்கிறார்.
பைக் – கார் ரேசிங் இரண்டிலும் ஆர்வம் காட்டும் அஜித் குமார், இப்படிப் பட்ட இளம் வீரர்களுக்கு உற்சாகம் அளித்து வருகிறார். அந்த சிறுவனிடம் ஆட்டோகிராப் வாங்கிய வீடியோ, அதற்கே ஒரு சின்ன உதாரணம்.









