பொது

பாதியில் நிறுத்தப்பட்ட 3 கிரிக்கெட் போட்டிகள்

பஹல்காம் தாக்குதல் காரணமாக பஞ்சாப் – டெல்லி இடையேயான போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன. இது கிரிக்கெட் வரலாற்றில் புதிதல்ல; இதற்கு முன்பு மூன்று முறை நடைபெற்று கொண்டிருந்த போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. அவை எப்போது, எங்கு என்பதைப் பார்ப்போம்.

இந்திரா காந்தி படுகொலை:

1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் நகரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே ஒருநாள் போட்டி நடைபெற்றது. அன்று இந்திய பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இந்தியா 40 ஓவர்களில் 210/3 ரன்கள் எடுத்திருந்தபோது, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜெனரல் ஜியா-உல்-ஹக் போட்டியை ரத்து செய்ய உத்தரவிட்டார்.

ரசிகர்களின் தாக்குதல்:

1978 ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதி, ரசிகர்கள் இடையே ஏற்பட்ட கலவரம் காரணமாக ஆஸ்திரேலியா – மேற்கிந்திய தீவுகள் இடையேயான டெஸ்ட் தொடர் பாதியில் கைவிடப்பட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் 3-1 என்ற முன்னிலையில் இருந்தது.

ஜமைக்காவில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருந்தது. மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டிற்கு 88 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹோல்டரின் விக்கெட் விழுந்தது. அந்த விக்கெட் மிகவும் முக்கியமானதாய் இருந்ததால், அவர் அவுட் ஆனதைக் கண்டதும் ரசிகர்கள் கோபமடைந்தனர். விக்கெட் வீழ்த்தப்பட்டதைக் கொண்டாடியபோது, ரசிகர்கள் ஆஸ்திரேலியர்கள் மீது கற்கள், பாட்டில்கள், நாற்காலிகளை வீசினர். சிலர் துப்பாக்கிகளை கூட மைதானத்திற்குள் கொண்டு சென்றனர். மைதானத்தில் காலி பாட்டில்கள், குப்பைகள் மற்றும் கற்களால் சிதறிக்கிடந்ததால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

பள்ளத்தால் பாதியில் நின்ற போட்டி:

இது சற்று வித்தியாசமான ஒன்று. ஆகஸ்ட் மாதம் 1975-ல் ஹெடிங்லியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி சமமாக சென்றுகொண்டிருந்தது. இறுதிநாள் காலையில் வந்தபோது, மைதானத்தின் ஒரு பகுதி தோண்டப்பட்டிருப்பதையும், அதன் மீது எண்ணெய் ஊற்றப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தனர். அதற்கு பிறகு அந்தப் போட்டி பாதியில் கைவிடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts