பொது

விதிகளை மீறும் Social Media – நேபாளத்தில் தடை!

நமது வாழ்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக Social Media மாறிவிட்டது. நண்பர்களுடன் பேச WhatsApp, டிரெண்டிங் தகவலை தெரிந்துகொள்ள X (Twitter), வீடியோ பார்க்க YouTube, Facebook – இப்படி Social Media-கள் எல்லாம் நம் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டது.

ஆனால், திடீரென ஒரு நாள் “இந்த ஆப்கள் அரசின் விதிகளை மீறியுள்ளன” என்று குற்றம் சாட்டி அவற்றை அரசு தடை செய்தால் என்ன நடக்கும்? அப்படி ஒரு நிகழ்வுதான் நமது அண்டை நாடான நேபாளத்தில் நடந்துள்ளது.

“ஏழு நாட்களில் அந்த நாட்டின் அமைச்சகத்தில் பதிவு செய்து, உள்ளூரில் வரும் புகார்களை கவனித்துக்கொள்ள உள்ளூர் அதிகாரியை நியமியுங்கள்” என்ற உத்தரவை நேபாள தொலைத்தொடர்பு ஆணையம் பிறப்பித்தது. ஆனால், இந்த உத்தரவை மெட்டா, ஆல்பபெட், X போன்ற பெரிய நிறுவனங்கள் ஏற்க மறுத்துவிட்டதால், அந்நாட்டு அரசு Facebook, Instagram, WhatsApp, YouTube, X ஆகிய முக்கிய தளங்களை தடை செய்துள்ளது.

இதுகுறித்து நேபாள அரசு தெரிவித்ததாவது: “வெறுப்புப் பேச்சு, வதந்திகள், இணையக் குற்றங்களை கட்டுப்படுத்த இதுவே ஒரே வழி. விதிகளை ஏற்றால் மீண்டும் திறக்கப்படும்” என தெரிவித்துள்ளது. TikTok, Viber போன்ற சில ஆப்கள் மட்டும் இந்த விதிகளை ஏற்றுக்கொண்டுள்ளன. ஒரு நாள் முழுவதும் இல்லாமல் நம்மில் எத்தனை பேர் இருக்க முடியும்…?

Related Posts