பொது

இந்தியாவிலேயே முதல் முறையாக – அதுவும் தமிழகத்தில்!

காட்டில் சிங்கம், புலி, சிறுத்தை வேட்டையாடுவதை போல் வானில் பறக்கும் கழுகுகள், பருந்துகள், வல்லூறு போன்ற பறவைகளும் வேட்டையாடி உண்ணும் குணம் கொண்டவை தான். தூள்ளிய பார்வை, கண்ணிமைக்கும் நேரம், என இரையை தேடி வேட்டையாடும் இதனை ‘Raptor’ எனவும் அழைப்பர். அழிந்துவரும் இந்த வகை பறவைகளை பாதுகாக்க தமிழக அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது

தமிழ்நாடு வனத்துறை இந்தியாவிலேயே முதல் முறையாக “கொன்று உண்ணும் பறவைகளுக்கான ஆராய்ச்சி அறக்கட்டளை ஒன்றை. “Tamil Nadu Raptor Research Foundation” என்ற பெயரில் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட Raptor இனங்கள் இருக்கு. அதில் கொண்டை பாம்புண்ணிக் கழுகு, கள்ளப்பருந்து, வல்லூறு போன்றவை மிக முக்கியமானவை. ஆனால், சில இனங்கள் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளன. அவற்றை காப்பதற்கும், வாழ்விட மறுசீரமைக்கும் பணிகளில் இந்த அறக்கட்டளை மேற்கொள்ளும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொன்று உண்ணும் பறவைகளை காக்கும் முயற்சியில் இடுபட்டு அதற்காக பவுண்டேசன் அமைத்த முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் மாறியுள்ளது.

Related Posts