சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனின் ஒரே மகள் காவ்யா மாறன். இவர் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் ஏற்கனவே பல கிரிக்கெட் அணிகளின் CEO-வாக உள்ளார். 2018 ஆம் ஆண்டு முதல் ஐபிஎலில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் CEO-வாகவும், South Africa T20 லீகில் சன்ரைசஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் CEO-வாகவும் உள்ளார். ஒவ்வொரு போட்டிக்கும் ஸ்டேடியம் சென்று உற்சாகமாக போட்டியை ரசித்து பார்ப்பார்.
South Africa T20 மற்றும் ஐபிஎலை தொடர்ந்து காவிய மாறனின் கவனம் இங்கிலாந்தில் நடைபெறும் “The Hundred” கிரிக்கெட் லீக்கின் மீது திரும்பியது. England and Wales Cricket Board (ECB) நடத்தும் இந்த லீகில் உள்ள Northern Superchargers அணியை சன் குழுமம் ரூ.1,161 கோடிக்கு வாங்கியுள்ளது. இதன் மூலம், யார்க்ஷயர் கவுண்டி கிரிக்கெட் கிளப்பின் 52% பங்கு மற்றும் England and Wales Cricket Board (ECB)-ன் 49% பங்குகளும் சேர்த்து, முழு உரிமையையும் சன் குழுமம் பெற்றுள்ளது.

ஹாரி புரூக் தலைமையிலான இந்த அணியில் டேவிட் மில்லர், அதில் ரஷித், மிச்சல் சாண்ட்னர் போன்ற முக்கிய வீரர்கள் உள்ளனர். அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்ட்ரூ பிளின்டாஃப் உள்ளார். 2024 ஆம் ஆண்டில் இந்த அணியின் வருவாய் ரூ.22 கோடி மட்டுமே இருந்த நிலையில், அதைவிட 53 மடங்கு அதிகமான விலைக்கு சன் குழுமம் இந்த அணியை வாங்கியுள்ளது.









