பொது

அபாயம்! வாக்காளர் சிறப்பு திருத்தம்… தமிழக வாக்காளர்களாகும் 70 லட்சம் வட இந்தியர்கள்!

இந்தியா முழுவதும் வாக்காளர் சிறப்பு திருத்தம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் 70 லட்சம் வெளி மாநிலத்தவர்கள், தமிழ்நாட்டின் வாக்காளர்களாக மாறும் சூழல் உருவாகியுள்ளது.

ஏற்கனவே மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப் படுவதாக் குற்றச்சாட்டு உள்ளது. என்.எல்.சி போன்ற தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களுக்கு கூட வெளி மாநிலங்களில் இருந்து மட்டுமே ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் எனவும் தமிழக அரசியல்வாதிகளால் குற்றஞ்சாட்டப்படுகிறது.

அரசு வேலைகள் மட்டுமின்றி, கோவை, திருப்பூர், சென்னை போன்ற பெருநகரங்களில் அமைந்திருக்கும் தனியார் நிறுவனங்களிலும் வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. கிராமபுரங்களில் உள்ள விவசாய வேலைகளுக்கு கூட வடமாநிலத்தவர்கள் வருவது யதார்த்தமாகிவிட்டது.

இப்படி வடமாநிங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்காக குடியேறியவர்களை வைத்து, தமிழ்நாட்டின் தேர்தல் தலையெழுத்தை மாற்ற, மத்திய அரசு இவர்களை பயன்படுத்தும் என்ற குற்றச்சாட்டை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்வைத்து வந்தார்.

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை கருத்தில் கொண்ட தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. அதன் விளைவாக, பீகாரில் 22 லட்சம் வாக்காளர்கள் காலம் தவறியிருப்பதும், 7 லட்சம் வாக்காளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பதிவு செய்துள்ளதும், 36 லட்சம் வாக்காளர்கள் பீகாரிலிருந்து வாழ்வாதாரத்தை தேடி வேறு மாநிலங்களுக்கு நிரந்தரமாக குடிபெயர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த அடிப்படையில் 65 லட்சம் பேரை பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.

இதனிடையே, பீகாரில் இருந்து வெளியேறிய வாக்காளர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா போன்ற தென் மாநிலங்களை தான் தேர்வு செய்து குடிபெயர்ந்துள்ளனர். அந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 6.5 லட்சம் பீகாரை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து இவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டின் வாக்காளர்களாக இவர்கள் மாறக்கூடும்.

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி தமிழ்நாட்டில் தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலத்தவார்கள் தங்களது பெயரை சேர்த்துக்கொள்ளும்படி விண்ணப்பிக்கும் பட்சத்தில், வரவிருக்கும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை அவர்கள் பெறுவார்கள்.

இன்றைய தினத்தில் தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசு இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருவாக ராகுல் காந்தி உட்பட இந்தியா கூட்டணி கட்சிகளின் முன்னணி தலைவர்கள் அனைவரும் இதுத் தொடர்பாக குற்றம் சாட்டி வருகிறார்கள்.

2026ல் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இறுதியாக வெளியான வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 70 லட்சம் வெளிமாநிலத்தவர்கள் இங்கு வாக்காளர்களாகும் வாய்ப்பு ஏற்பட்டால், அவர்கள் பெரும்பான்மை வாக்காளர்களாக இல்லாவிட்டாலும், குறிப்பிட்ட நகர்புறங்களில் அவர்கள் வெற்றியை தீர்மானிக்கும் வாக்காளர்களாக உருவெடுக்கக் கூடும்.

இது மாநில கட்சிகளை பலவீனப்படுத்தும் அதேநேரத்தில், பாஜக, காங்கிரஸ் போன்ற இந்திய அளவிலான கட்சிகள் இங்கு வலுபெறும் சூழலையும் உருவாக்கலாம். தமிழ்நாட்டிற்கு அறிமுகமே இல்லாத ஜன் சுராஜ், ராஷ்டிரிய ஜனதா தள், அஸ்ஸாம் கன பரிஷத் போன்ற கட்சிகள் கூட இங்கு லட்சகணக்கில் வாக்குகளை வாங்கலாம். அங்கீகாரம் பெறலாம். கூட்டணி அமைத்து ஆட்சிக்கூட அமைக்கலாம்

Related Posts