பொது

வேலை செய்ய கண்டிப்பா AI யூஸ் பண்ணனும்.. சுந்தர் பிச்சையின் புது ஆர்டர்!

வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில், அனைவரின் கவனமும் ஏஐ (AI) மீது திரும்பியுள்ளது. தேடுபொறியில் மட்டுமல்ல, ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியிலும் முன்னணியில் இருக்கும் நிறுவனம் கூகுள். குறிப்பாக தற்போது டிரெண்டாகி NaNo Banana போன்ற பல புதிய AI முயற்சிகளில் அசத்தி வருகிறது கூகுள்.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை, “Windsurf நிறுவனத்தின் திறமை, கூகுளின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இப்போது கூகுள், AI-ஐ மையமாக வைத்து தொழில்நுட்ப உலகில் புதிய பாதையில் பயணிக்கிறது. அதன் முக்கிய நோக்கம் வேலைகளை வேகமாகவும் திறமையாகவும் செய்வது, ஊழியர்களின் திறனை அதிகரிப்பது. கூகுள் தனது ஊழியர்களிடம், “AI-ஐ கற்றுக்கொண்டு, உங்கள் அன்றாட அலுவலக வேலைகளில் பயன்படுத்தத் தொடங்குங்கள். அதுவே உங்கள் வெற்றிக்கான பாதை” என்று அறிவுறுத்தியுள்ளது. இந்த வார்த்தைகள், கூகுள் ஊழியர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த வளர்ச்சிக்கு அடுத்தபடியாக, கூகுள் ஒரு பெரிய முடிவை எடுத்திருக்கிறது. 2025-க்குள், AI மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்களில் $85 பில்லியன் முதலீடு செய்ய அது திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில், செலவைக் குறைக்கும் முயற்சியாக, ஊழியர்களின் எண்ணிக்கையையும் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, 2023-இல், கூகுள் தனது ஊழியர்களில் 6% பேரை பணி நீக்கம் செய்தது.

புதிய நிறுவனம் வாங்கிய கூகுள்…

AI வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்தும் நோக்கத்தில், கூகுள் இன்னொரு முக்கிய முடிவை எடுத்தது. அது Windsurf என்ற AI நிறுவனத்தை $2.4 பில்லியனுக்கு வாங்கியது. இந்த நிறுவனத்தின் முக்கியப் பொறியாளர்கள் இப்போது கூகுளின் வளர்ச்சியில் பங்காற்றுகின்றனர். இதனை இன்று கூகுள் மட்டுமல்ல, அனைத்து முன்னணி நிறுவனங்களும் ஏற்றுக்கொள்கின்றன. அவை சொல்லும் ஒரே விஷயம், எதிர்கால வெற்றி என்பது AI-ஐ அறிந்து, அதை முழுமையாகப் பயன்படுத்துவதில்தான் உள்ளது.

கூகுள், AI வளர்ச்சிக்காக வெறும் வார்த்தைகளை மட்டும் கூறாமல், அதைச் செயலிலும் காட்டியது. தனது ஊழியர்களுக்காகச் சில சிறந்த AI கருவிகளை உருவாக்கியது.

Cider: இது coding செய்வதை எளிதாக்கும் ஒரு கருவி. தற்போது 50% ஊழியர்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள்.

AI Savvy Google: இது AI பற்றி பாடங்கள், பயிற்சி வீடியோக்கள் மற்றும் கருவிகளை உள்ளடக்கிய ஒரு வலைத்தளம்.

Building with Gemini: இது DeepMind நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட, AI பயிற்சிக்கான ஒரு புதிய திட்டம்.

கூகுள் மட்டுமல்லாமல், மற்ற பெரிய நிறுவனங்களும் AI மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளன.

அமேசான் தலைவர் ஆண்டி ஜாசி, “AI கருவிகள் இருந்தால், சிறிய குழுவினராலும் பெரிய வேலைகளைச் செய்ய முடியும்.”

மைக்ரோசாஃப்ட் தலைவர் ஜூலியா லியூசன், “AI பயன்படுத்துவது ஒரு விருப்பம் அல்ல, இப்போது அது கட்டாயம்.”

ஷாப்பிஃபை தலைவர் டோபி லுட்கே, “AI இல்லாமல் வேலை செய்வது இனி சாத்தியமில்லை.”

இந்த முன்னணி நிறுவனங்களின் கருத்துகள், தொழில்நுட்ப உலகின் எதிர்காலம் எந்த திசையை நோக்கிச் செல்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.

Related Posts