பொது

“நாம் வசுதைவ குடும்பகம்” : மோடி பெருமிதம்

ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள மத்திய தரைக்கடல் தீவு நாடான சைப்ரஸுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு மிக உயரிய விருதான “Grand Cross of the Order of Makarios III” -ஐ அந்நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடுலிடெஸ் வழங்கி கௌரவித்தார்.

PM Modi Cyprus visit

நிகோசியாவில் உள்ள அதிபர் மாளிகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் மோடி, “இந்த விருதுக்காக சைப்ரஸ் அரசுக்கும், மக்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு மட்டும் கிடைத்த விருது அல்ல; 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்த விருதாகும். இந்தியாவுக்கும் சைப்ரஸுக்கும் இடையே நல்ல நட்புறவு உள்ளது.

மேலும், ‘வசுதைவ குடும்பகம்’- உலகம் ஒரே குடும்பம் எனும் இந்தியாவின் பழமையான தத்துவத்தையும், உலக அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கான நோக்கத்தை இந்த விருது பிரதிபலிக்கிறது. அமைதி, பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் வளம் ஆகிய துறைகளில் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளின் அடையாளமாக இந்த விருது அமைந்துள்ளது” என்று தெரிவித்தார்.

PM Modi Cyprus visit

மூன்று நாடுகளுக்கான பயணமாக சைப்ரஸுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதன் பின், பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருகின்றன. பின்னர் சைப்ரஸிலிருந்து ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள கனடாவுக்குப் புறப்படுகிறார் மோடி. பிரதமரின் மூன்று நாடுகளுக்கான பயணத்தின் கடைசி கட்டமாக, அவர் குரோஷியாவுக்குச் செல்கிறார்.

Related Posts