பொது

Coolie மொத்த வசூலில் ரூ.100 கோடிக்கு மேல் Loss ஆக வாய்ப்பு!

ரஜினிகாந்தின் ‘Coolie’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. திரையுலகில் ரஜினிகாந்த் கால்பதித்து இன்றுடன் (ஆக.14) 50 வருடங்கள் நிறைவுபெற்றுள்ளதால், இந்த திரைப்படம் அவருக்கும் மிகவும் ஸ்பெஷல். இந்த திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் A சான்றிதழ் வழங்கியிருந்தது. 1989-ல் வெளியான ‘சிவா’ திரைப்படத்திற்கு பிறகு இப்போது ‘கூலி’ திரைப்படத்திற்கு 36 ஆண்டுகளுக்கு பிறகு A சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனால் இந்த படத்தின் வசூலை பாதிக்கும்? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகராக வளம் வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். தற்பொழுது தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக உள்ளவர் லோகேஷ் கனகராஜ். இவர்களின் கூட்டணியில் ‘Coolie’ முதல் திரைப்படம் என்பதால், இதற்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. பாலிவுடில் ஆமிர் கான், கன்னடாவில் உபேந்திரா, தெலுங்கில் நாகார்ஜுனா, மலையாளத்தில் சோபின் ஷாஹிர் உள்ளிட்ட நான்கு மொழிகளிலும் உள்ள முக்கிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ஷ்ருதி ஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பெரிய நடிகர் பட்டாளமே இதில் நடித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

லோகேஷ் திரைப்படம் என்றாலே ஆக்ஷனுக்கு பஞ்சமே இருக்காது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அப்படி ‘Coolie’யிலும் அதிக வன்முறை காட்சிகள் இருப்பதால், தணிக்கை வாரியம் A சான்றிதழ் வழங்கியுள்ளது. 1989-ல் வெளியான ‘சிவா’ திரைப்படத்திற்கு பிறகு இப்போது ‘Coolie’ திரைப்படத்திற்கு A சான்றிதழ் கிடைத்துள்ளது. ஆபாசம் இல்லையென்றாலும், அதிக ரத்த, வன்முறை காட்சிகளுக்கு A சான்றிதழ் வழங்குவது வழக்கம். லோகேஷ் திரைப்படத்திற்கு A சான்றிதழ் வழங்கியது ஆச்சரியமில்லை என்றாலும், சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மேலும் பிவிஆர் ஐனாக்ஸ், ஏஜிஎஸ், தேவி உள்ளிட்ட திரையரங்குகள், “‘Coolie’ திரைப்படம் A சான்றிதழ் படம் என்பதால் குழந்தைகளை அழைத்து வர வேண்டாம்” என அறிவித்துள்ளன. இதனால் ஃபாமிலி ஆடியன்ஸ் இதில் வருவதில் சிக்கல் உள்ளது. குடியரசு தின விடுமுறையை குடும்பத்தோடு கொண்டாட திரைப் படம் பார்க்க செல்வோருக்கு இது அதிருப்தியே. இதனால் மொத்த வசூலில் 80–100 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என்கின்றன சினிமா வட்டாரங்கள். கடந்த 36 ஆண்டுகளில் ரஜினிகாந்த் நடிப்பில் எந்த A சான்றிதழ் படமும் வெளிவராததால், அவரின் படங்களை அனைத்து வயதினரும் பார்த்து வந்தனர். “இந்த திரைப்படத்திற்கு U/A கிடைத்திருந்தால் வசூல் இன்னும் அதிகமாக இருக்கும்” எனக் திரையரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதனை மீறி 18 உட்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டால் ஒரு நபருக்கு ரூ.10,000 தியேட்டர் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீப ஆண்டுகளில் வெளியான ‘ராயன்’, ‘அனிமல்’, ‘அர்ஜுன் ரெட்டி’ போன்ற A சான்றிதழ் பெற்ற படங்களும் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளதால், ‘கூலி’யும் வெற்றி பெறும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

Related Posts