TSF குழுமத்தின் முன்னணி ஆட்டோமொபைல் உதிரிபாகத் தயாரிப்பு நிறுவனமான வீல்ஸ் இந்தியா, 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.37 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ரூ.26 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.
கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.1,187 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த வருவாய், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.1,386 கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும், 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் வீல்ஸ் இந்தியாவின் ஏற்றுமதி 17.3 சதவிதம் அதிகரித்து ரூ.380 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் இது ரூ.324 கோடியாக இருந்தது.
“ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்களுக்குப் பிறகும் கார்கள், லாரிகள் மற்றும் விவசாய டிராக்டர்களுக்கான தேவை அதிகரித்தது. இதனால் நிறுவனத்தின் வளர்ச்சியும் அதிகரித்தது. அதேவேளையில், மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி காரணமாக மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. எனினும், நடப்பு காலாண்டிலும் இதே வளர்ச்சி வேகம் தொடரும் என வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஸ்ரீவத்ஸ் ராம் தெரிவித்தார்.









