ஹரியானா: மனைவியின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட நினைத்த கணவர், நள்ளிரவு 12 மணிக்கு சரியான சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக கேக் ஒன்றை வாங்கி ஃபிரிட்ஜில் வைத்திருந்தார்.
ஆனால், கேக்கை ஃபிரிட்ஜில் வைத்த பின்னர் அல்லாரம் வைத்துவிட்டு உறங்கிவிட்டார். நள்ளிரவு 12 மணிக்கு அலாரம் அடித்தபோதும், ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த கணவரால் எழ முடியவில்லை.
அதே நேரம், அலாரத்தின் சத்தம் கேட்டு எழுந்த மனைவி, என்ன விஷயம் என்று தெரியாமல் அலாரத்தை அணைத்துவிட்டு கணவருடன் சேர்ந்து உறங்கிவிட்டார்.
மறுநாள் காலையில் கண் விழித்த மனைவி, ஃபிரிட்ஜில் இருந்த கேக்கைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போதுதான் கணவரின் சர்ப்ரைஸ் பிளானைப் பற்றி அவருக்குத் தெரியவந்தது.
பிறந்தநாளுக்காக கணவர் செய்த ஏற்பாடு தூக்கத்தால் தடைப்பட்டதைக் கண்டு சிரித்த மனைவி, கேக்குடன் ஒரு செல்ஃபி எடுத்து இந்த சுவாரஸ்ய சம்பவத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.









