பொது

பிரதமர் மோடியின் வாட்ச் டிசைன்… வைரலாகும் 1947-ம் ஆண்டு ஸ்டோரி!

பிரதமர் நரேந்திர மோடி தனக்கென ஒரு தனித்துவமான ஸ்டைலில் ஆடை அணிபவர். இவரது டிரஸ் காஸ்டியும் பலரது கவனத்தையும் ஈர்க்கும். அந்த வகையில், மோடியின் ஆடை டிசைன்னும் ஒருவிதமான ஸ்டைலாகவே இருக்கும். சிம்பிளான ஆடையாக பார்க்கப்பட்டாலும், அதன் தரம், டிசைன் ஆகியவை பார்க்கும் மக்களைக் கவர்கிறது.

சமீபத்தில், பிரதமர் கையில் இருக்கும் வாட்ச் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் இந்தியாவின் வரலாற்றைச் சொல்லும் விஷயங்கள் பொதிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர் கையில் இருக்கும் இந்த வாட்சின் விலை சுமார் ரூ. 55,000 முதல் ரூ. 60,000 வரை இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இதன் தனித்துவமான அம்சம் என்னவென்றால், அதில் 1947 ஆம் ஆண்டு கடைசியாக அச்சிடப்பட்ட ஒரு ரூபாய் நாணயத்தின் டிசைன் பொறிக்கப்பட்டுள்ளது.

இது ஜெய்ப்பூர் வாட்ச் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இதன் டிசைன் ஜப்பானிய மியோட்டா இயக்கத்தால் இயக்கப்படும் 43 மி.மீ. ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலால் உருவாக்கப்பட்டதாகும். இதற்கு ‘ரோமன் பார்க்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு புலி உருவமும், அத்துடன் 1947 ஆம் ஆண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாணயம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அச்சிடப்பட்ட கடைசி நாணயம் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த வாட்ச் நமது இந்தியா சுதந்திரம் அடைந்ததை நினைவுகூரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts