பொது

தமிழகத்தில் பேஷன் டிசைனிங் பயிற்சி நிறுவனம்… இத்தாலி – இந்தியா முக்கிய சந்திப்பு

உலகின் முன்னணி பேஷன் டிசைன் கல்வி நிறுவனங்களில் ஒன்றான IUAD பல்கலைக்கழகத்தின் முக்கிய பிரதிநிதிகள் KICL நிறுவனத்தின் தலைமையகத்திற்கு முதல்முறையாக வருகை புரிந்தனர்.

தமிழ்நாட்டில் பயிற்சி மையம் அமைக்க இத்தாலி நாட்டின் அகாடமியா IUAD உடன் கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் (KICL) நிறுவனம் சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. அதன் தொடர்ச்சியாக IUAD நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் லெட்டியேரி, Accademia இயக்குநர் ஜியூசெப்பினா ஆரிச்சியோ, சர்வதேச உறவுத்துறையின் இயக்குநர் மாஸ்ஸிமோ கப்பொலினி மற்றும் European Footwear Federation முன்னாள் சேர்மன் கிளெட்டோ சாக்ரிப்பாந்தி ஆகியோர் சென்னையில் உள்ள KICL தலைமையகத்திற்கு நேற்று (04.11.2025) வருகை புரிந்தனர்.

இவர்களுக்கு கோத்தாரி இண்டஸ்ட்ரியல் நிறுவனத்தின் தலைவர் டாக்டர். ஜே. ரஃபிக் அகமது தலைமையில் கோத்தாரி அலுவலக ஊழியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இந்த சந்திப்பில் காலணி துறை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் டாக்டர். என். மோகன், மற்றும் KICL ஆலோசகர் டாக்டர். ஜெயந்த் முரளி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

100 ஆண்டுக்கும் மேலாக வெற்றிகரமாக இயங்கிவரும் கோத்தாரி நிறுவனத்தின் சாதனைகளை, IUAD-ன் முக்கிய பிரதிநிதிகளுக்கு கோத்தாரி நிறுவனத்தின் தலைவர் டாக்டர். ஜே. ரஃபிக் அகமது விளக்கினார்.

கல்வி, Innovation, தொழில் ஆகிய துறைகளில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு வெற்றிகரமாக நடந்தேறியது. விரைவில் இந்த பயிற்சி நிறுவனம் தமிழகத்தில் எங்கு? எப்பொழுது அமைப்பது தொடர்பாக முக்கிய முடிவுகள் ஆலோசிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

Related Posts