கேரள மாநில அளவிலான தடகளப் போட்டியில், கன்னியாஸ்திரி சபீனா, 55 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
தேசிய அளவில் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் இளம் வயதில் சிறந்து விளங்கியவர், தற்போது 55 வயதுக்கு மேற்பட்டோருக்கான மாநிலத் தடகளப் போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார்.

பதின்ம வயதில் தேசிய அளவிலான தடை தாண்டும் ஓட்டப்பந்தய வீரராக இருந்த சபீனா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பந்தயங்களில் பங்கேற்று, 55+ பிரிவில் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
தற்போது அவர் ஓர் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் கலந்துகொண்ட இந்தப் போட்டியானது, அவர் ஓய்வு பெறுவதற்கு முன் பங்கேற்ற இறுதிப் போட்டி ஆகும். அடுத்த மார்ச் மாதம் உடற்கல்வி ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். ஓய்வு பெறுவதற்கு முன் கடைசியாக ஒருமுறை போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தினாலேயே மாநிலப் போட்டியில் கலந்துகொண்டதாக அவர் கூறினார்.









