GST வரி குறைப்பால் கார், ஏசி, வாஷிங் மெஷின், டிவி விற்பனை அதிகரித்துள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “நவராத்திரியின் முதல் நாளில் GST சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டன; இந்திய மக்கள் அதனை ஏற்றுக்கொண்டதாக நான் உணர்கிறேன். ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது. GST வரி குறைப்பால் நுகர்வோருக்கு பலன் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. GST வரி குறைப்பால் கார், ஏசி, வாஷிங் மெஷின், டிவி விற்பனை அதிகரித்துள்ளது. அரசு தினசரி பயன்படுத்தும் 54 பொருட்களை உன்னிப்பாக கண்காணித்து வந்தது.
வரிச்சலுகையால் நுகர்வோர் பலன் அடைந்து வருகின்றனர். பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு மக்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. பொது மக்களின் நலன் கருதி மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்தது. ஆட்டோ மொபைல் துறையில் விற்பனை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தற்சார்பு இந்தியாவின் வளர்ச்சிக்கு புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.









