இரண்டு நாள் பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்ற நிலையில், அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோகள் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பயணத்தின் பொழுது பிரதமர் மோடிக்கு தருமா ஜி கோயிலின் தலைமை குரு ரெவ் சீஷி ஹிரோஸ் தரும பொம்மையை பரிசாக வழங்கினார்.
இது அந்த நாட்டு மக்களின் முக்கிய கலாச்சார சின்னமாகவும், நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இதற்கு பிறகு ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்கும், அவரது மனைவி யோஷிகோ இஷிபாவுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசு எல்லாரையும் ஆச்சரிபடுத்தீருக்கு.
முதலில் ஒரு பெட்டியில் விலைமதிப்பற்ற கல்லால் ஆன ராமன் கிண்ணங்களை வெள்ளி ஸ்போன்களுடன் பரிசாக வழங்கினார். அப்படி என்ன ஸ்பெஷல் கேட்குறிங்க? இந்த கின்னம் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து பெறப்பட்ட வின்வேளிகல்லால் செய்யப்பட்ட கிண்ணம் இது. இந்த கின்னத்தின் புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது. இதுமட்டுமல்ல, இஷிபாவின் மனைவிக்கு உலக புகழ் பெற்ற காஷ்மீரின் பாஷ்மினா சால்வையும் பரிசாக வழங்கியுள்ளார். அந்த காலத்தில் இந்திய வரும் அரசர்களுக்கு இந்த சால்வையை வழங்குவது வழக்கம். இது உலக சந்தையில் மிகவும் பிரபலமானதற்கு காரணம் இதன் மெல்லிமை தான். இதனைத் தான் பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.









