இந்த மாதம் உலகம் முழுவதும் வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் குவித்த திரைப்படமாக மாறியுள்ளது ‘Jurassic World: Rebirth’. குட்டீஸ் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கக்கூடிய படங்களில் ஒன்று ஜுராசிக் வேர்ல்ட்.
32 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘Jurassic Park’ அப்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பெரிய பெரிய கால்கள்… ஆக்ரோஷமான பற்கள்… மனிதர்களை விட 10 மடங்கு உயரம்… இப்படி நாம் கற்பனையிலும் புகைப்படங்களில் மட்டுமே பார்த்ததை நமது கண்களுக்கு சினிமா மூலம் காட்டினர்.

இதன் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து வெளியான அதன் சீக்வெலும் (sequel) வெற்றி பெற்றது. இந்த திரைபடம் தற்போழுது ஜுராசிக் யூனிவெர்ஸின் ஏழாவது பாகமாக வெளியாகியிருக்கிறது. ஸ்கார்லெட் ஜோஹன்சன், ஜொனாதன் பேலி, மஹெர்ஷலா அலி உள்ளிட்ட முக்கிய நடிகர்களின் நடிப்பில் ஜூலை 4 ஆம் தேதி வெளியான ‘Jurassic World: Rebirth’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. எப்போது, எந்த டைனோசர் வரும்… யார் எப்படி பிழைப்பார்கள்… என ஒரு திரில்லராக தான் இந்த ஜுராசிக் யூனிவர்ஸ் அமையும். அதே போல் இதிலும் தத்ருபமாகக் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. 2022 ஆம் ஆண்டு வெளியான ‘Jurassic World Dominion’ திரைப்படத்திற்குப் பிறகு நடப்பதாக இது அமைந்துள்ளது.
இந்த திரைப்படம் இந்தியாவில் மட்டும் இதுவரை ₹100 கோடியுக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. உலக அளவில் ₹4000 கோடிகளை தாண்டி வசூலித்துவருகிறது. இந்த மாதம் இந்தியாவில் வெளியான திரைபடங்களில் இது தான் அதிக வசூல் செய்த திரைபடம்.









