பொது

அந்த நாள் ஞாபகம் வந்ததே! 2013 சாம்பியன்ஸ் டிராபி வென்ற அதே நாள்

2011ஆம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்றதற்கு முக்கிய காரணம் “இந்தியாவில் விளையாடியது” என பல அணிகள் விமர்சனங்கள் வைத்தன. இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், இந்திய அணி 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.

இந்த தொடரில், மூத்த வீரர்கள் இல்லாமல், ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, அஸ்வின் போன்ற இளம் வீரர்களுடன், தோனி தலைமையில் இளம் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் கால் பதித்தது.

இன்று இந்தியாவின் முன்னணி ஓப்பனராக உள்ள ரோகித் சர்மா, அப்பொழுது மிடில்  ஆர்டரில் விளையாடி வந்தார். ஆனால் இந்தத் தொடரில் தோனி முதல்முறையாக அவரை தொடக்க வீரராக களம் இறக்கினர். இது ரோகித்தின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிய தருணம் என அவர் பல நேர்காணல்களில் தெரிவித்துள்ளார். இளம் வீரர்கள் மீது தோனி வைத்த நம்பிக்கை தான் இந்தியாவுக்கு பல கோப்பைகளை பெற்றுக்கொடுத்துள்ளது.

2013 champions trophy

ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி இந்த டாப் ஆர்டர், இந்தியாவின் சிறந்த டாப் ஆர்டராக மறியது. இந்த தொடரின் வெற்றி பெற இதுவும் ஒரு காரணம். மிடில் ஆர்டரில் கார்த்திக், ரெய்னா, தோனியும் சிறப்பாக விளையாடினர். இங்கிலாந்து பீட்சில் பல அணிகள் நான்கு வேகப் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினாலும், தோனி 2 சுழற்பந்துவீச்சாளர்களுடன் (ஜடேஜா, அஸ்வின்) விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாமல் இறுதிப்போட்டி வரை சென்று தனது பலத்தை கிரிகெட் ரசிகர்களுக்கு காட்டியது. லீக் சுற்று, பிளேஆஃப் என எல்லா அணிகளையும் வென்றது.

13 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் (ஜூன் 23) பர்மிங்காம் நகரில் இறுதிப் போட்டி நடைபெற்றது. ஆனால் மழை காரணமாக 50 ஓவர் போட்டி 20 ஓவருக்கு குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 129 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 130 எடுத்தால் வெற்றி என்பது குறைவுதான். அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஜடேஜா, அஸ்வின் மற்றும் ரெய்னா சுழலில் சிக்கியது.

விக்கெட்டுகள் விழுந்தாலும் ஒரு பக்கம் ரன்கள் வந்து கொண்டுதான் இருந்தன. கடைசி சில சிக்சர்கள் மூலம் இங்கிலாந்து வெற்றி நெருக்கத்தில் வந்தது. கடைசி 18 பந்துகளில் 28 ரன்கள் தேவை – இது T20வில் சாதாரணம் தான். ஆனால் ரசிகர்களுக்குப் பெரிய சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில், 19 வது ஓவரை இஷாந்த் ஷர்மாவிடம், 20வது ஓவரை அஷ்வினிடம் கொடுத்தார் தோனி.

2013 champions trophy

கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்படும் சூழ்நிலையில், அஷ்வின் Dot Ball வீசினார். ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபியை முதல் முறையாக கைபற்றியது இந்தியா. அதிகமான ஏமோஷன் காட்டத தோனி, அந்த வெற்றியின் உற்சாகத்தில் குழந்தை போல துள்ளி குதித்த வீடியோ இன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நாளை கொண்டாடும் வகையில் BCCI ஒரு புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளது.

Related Posts