பொது

டிராவிட், கோலியை தொடர்ந்து சாய் சுதர்சன்: இனிமே தான் ஆட்டமே!

8 ஆண்டுகளுக்குப் பிறகு, கருண் நாயருக்கு மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று (ஜூன் 20) மதியம் 3.30 மணிக்கு ஹெட்டிங்லேயில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ind vs england sai sudharsan

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அவர்கள் இடத்தை யார் நிரப்பப் போகின்றனர் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதன் காரணமாக இந்த தொடருக்கான இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

2025-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல்லில் அதிக ரன்கள் குவித்த தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் சாய் சுதர்சன, முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் சத்தீஸ்வர் புஜாரா டெஸ்ட் தொப்பி வழங்கி பாராட்டினார். இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஜூன் 20—ஐ “lucky debut date” என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அதனால் இந்த தேதி இந்தியாவிற்க்கு சற்று ராசியான தேதி என சமுக வளைதலங்தளில் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறனர்.

 

ராகுல் டிராவிட் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் ஜூன் 20, 1996 அன்று இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்கள். கங்குலி 3வது இடத்தில் பேட்டிங் செய்து 301 பந்துகளில் 131 ரன்கள் எடுத்தார். டிராவிட் 267 பந்துகளில் 95 ரன்கள் விளாசினார். அதேபோன்று, விராட் கோலி 2011 ஜூன் 20 அன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தனது டெஸ்ட் வாழ்க்கையை தொடங்கினார். இந்த வரிசையில் இப்போது சாய் சுதர்சனும் ஜூன் 20 அன்று டெஸ்ட் அறிமுகம் ஆகிறார் என்பதாலே இந்த தேதி மீண்டும் வைரலாகி வருகிறது.

 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி “டெஸ்டில் அறிமுகமாக ஜூன் 20-ஐ விட சிறந்த தேதி இல்லை” என கூறி, டிராவிட், கங்குலி, கோலி மற்றும் சாய் சுதர்சனின் புகைப்படங்களை சேர்த்து எடிட் செய்து வெளியிட்டுள்ளது.

ind vs england sai sudharsan

சாய் சுதர்சனைத் தொடர்ந்து, கருண் நாயரும் இந்திய டெஸ்ட் அணியின் Playing XI-இல் இடம் பிடித்துள்ளார். 33 வயதான கருண் நாயர் கடைசியாக மார்ச் 2017 இல் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணி விவரம்

யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

இங்கிலாந்து அணி விவரம்

ஜாக் கிராலி , பென் டக்கெட், ஆய்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்) , ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ் , பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங், ஷோயப் பஷீர்.

Related Posts