இந்தியாவின் வளர்ச்சியில் வேளாண்துறை முக்கிய பங்காற்றி வருகிறது. சமீபத்தில், ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. இதற்கான முக்கியக் காரணி நவீன தொழில்நுட்ப வளர்ச்சியும், விவசாயத்தில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் தான்.
அந்த வகையில் இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் முன்னோடியாக திகழும் கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் (KICL) நிறுவனம், விவசாயத் துறையில் தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்கி வருகிறது.
நன்மைகள் ஒரு பக்கம் இருந்தாலும் விவசாயிகள் சந்திக்க கூடிய பிரச்சனைகள் மறுபுறம் — காலநிலை மாற்றம், மானிய சிக்கல்கள், குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்டவைகள். ஆனால், இவற்றில் முக்கியமானது பூச்சி தாக்குதல். ஒரு விவசாயி கடனுக்கு பணம் வங்கி விவசாயம் செய்து விளைச்சல் எடுக்கும் நேரத்தில் பூச்சிகள் அதனை நாசம் ஆக்கிவிடுகின்றன. இதனால் பெரும் நஷ்டம் அடைகின்றனர்.
இதனை சரிசெய்ய கோத்தாரி நிறுவனம் புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளது. KICL நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஜே. ரஃபீக் அகமது வழிகாட்டுதலின் கீழ், விவசாயிகளின் நலனுக்காக புதிய வேளாண் இடுபொருட்கள் இன்று (10.06.2025) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதிகரித்து வரும் வேளாண் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், பூச்சிகளால் எற்படும் நஷ்டத்தில் இருந்து அவர்களை காப்பற்றவும் 30 உயர் செயல்திறன் கொண்ட பூச்சிக்கொல்லிகளை (Pesticide) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை, பூச்சிக் கொல்லிகள் (Insecticides), பூஞ்சானக் கொல்லிகள் (Fungicides) மற்றும் களைக் கொல்லிகள் (Herbicides) என மூன்று பிரிவுகளாக வகைப் படுத்தப்பட்டுள்ளன.
இந்த தயாரிப்புகள், ட்ரோன் தெளிப்பு, மோட்டார் ஸ்பிரேயர் மற்றும் கை தெளிப்பான் உள்ளிட்ட அனைத்து தெளிப்பு சாதனங்களுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், இது பிற பூச்சிக்கொல்லி தயாரிப்புகளுடனும் கலந்து பயன்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
விவசாயத்தின் உற்பத்தித்திறன், நிலைத்தன்மை மற்றும் வருமானத்தை உயர்த்தும் நோக்கத்துடன், KICL நிறுவனம் எப்போதும் விவசாயிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த புதிய தயாரிப்புகள், விவசாயியின் நம்பகமான தோழனாக KICL நிறுவனம் திகழ்வதை மேலும் உறுதிப்படுத்துகின்றன.









