உலகப் பொருளாதாரத்தில் நடைபெற்று வரும் மாற்றங்களின் காரணமாக, இந்திய பங்குச் சந்தை இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே சரிவை சந்தித்து வருகிறது.
2026 ஜனவரி 1 முதல் 16 வரை, FIIs என சொல்லப்படும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்திய பங்குச் சந்தையிலிருந்து சுமார் ரூ.22,530 கோடி முதலீட்டை வெளிய எடுத்துள்ளதாக National Securities Depository Limited (NSDL) தெரிவித்துள்ளது. இந்த அளவிலான வெளிநாட்டு முதலீட்டு வெளியேற்றம் இருந்தாலும், அதை ஈடு செய்யும் வகையில், உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் தங்களுடைய முதலீடுகளை அதிகரித்து வருகிறது.
கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும், FIIs சுமார் ரூ.1.66 லட்சம் கோடி முதலீட்டை இந்திய பங்கு சந்தையிலிருந்து எடுத்துச் இருக்காங்க. அமெரிக்க டாலருடன் ஒப்பிடும் போது ரூபாய் மதிப்பு சரிவு, உலக அரசியல் பதற்றங்கள், அமெரிக்காவின் சுங்கவரி உள்ளிட்டவை இதற்கு முக்கிய காரணம்.
இந்த வெளிநாட்டு முதலீட்டு வெளியேரியதால், 2025 ஆம் ஆண்டு ரூபாய் மதிப்பு சுமார் 5% வீழ்ச்சியை சந்தித்ததாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து இருகின்றனர்.
அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்ததும், அந்நாட்டில் அரசு பத்திரங்களின் வட்டிவிகிதங்கள் அதிகரித்ததாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானம் தரும் சந்தைகளை நோக்கி முதலீடுகளை திருப்பி வருகின்றனர். இதன் காரணமாக, இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளில் முதலீட்டு ஓட்டம் தற்காலிகமாக குறைந்துள்ளது.
இதே நேரத்தில், உள்நாட்டு முதலீட்டாளர்கள் கடந்த 16 நாட்களில் மட்டும் ரூ.34,076 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இதனால் சந்தையில் பெரிய அளவிலான சரிவு ஏற்படாவில்லை. வெளிநாட்டு முதலீடுகள் குறைந்தாலும் இந்திய பொருளாதாரத்தின் மீதான உள்நாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை இன்னும் வலுவாக உள்ளது.
ரூபாய் மதிப்பு மீண்டும் அதிகரிக்கும் போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய சந்தையை நோக்கி திரும்புவார்கள் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.








