கடந்த சில ஆண்டுகளில் AI மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. முன்பு மனிதர்கள் செய்த coding, data analysis போன்ற பல வேலைகளை இன்றைக்கு AI, சில நிமிடங்களில் செய்து முடித்துவிடுகிறது.
இந்த நிலையில் Microsoft AI-யின் சி.இ.ஓ சமீபத்திய ஒரு நேர்காணலில், “அலுவலகங்களில் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து செய்கிற பல வேலைகளை AI செய்யத் தொடங்கிவிட்டது. இதனால் இஞ்ஜினியர்கள் மற்றும் coding டெக்னீசியன் மட்டுமல்லாமல், வழக்கறிஞர்கள், கணக்காளர்கள், மார்க்கெட்டிங் ஊழியர்கள் வரை அனைவரும் இதன் தாக்கத்தை சந்திக்க இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
2024–2025-ல், TCS, Infosys, Wipro போன்ற பல பெரிய பெரிய IT நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. குறிப்பாக 2025 ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமான இஞ்ஜினியர்கள் வேலை போயிருப்பதாக சில அறிக்கைகளும் வெளியானது. இந்த வேலை இழப்புகள் இந்திய IT துறையில் பெரிய பயத்தை ஏற்படுத்தி இருக்கு.
இந்த நிறுவனங்களின் பங்குகள் சமீபத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளன. IT துறையை பிரதிபலிக்கும் NIFTY IT குறியீடு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 16% வரை வீழ்ச்சி கண்டுள்ளது. சமீபத்திய சரிவில் IT துறை பங்குகளே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. மொத்த வேல்யூ பார்க்கும் போது, IT பங்குகளின் மதிப்பில் மட்டும் சுமார் 1.3 லட்சம் கோடி ரூபாய் வரை குறைந்துள்ளது.
மேலும், அமெரிக்காவைச் சேர்ந்த Anthropic நிறுவனம் அறிமுகப்படுத்திய Claude போன்ற புதிய AI chatbot-கள், முன்பு மனிதர்கள் செய்த coding, data analysis, customer support போன்ற வேலைகளை கம்மி நேரத்தில் அதிக துல்லியத்துடன் செய்து முடிக்கின்றன. ஒரு பெரிய project-ஆக இருந்தாலும், AI சில நிமிடங்களில் அதை செய்து முடிக்கும் திறன் கொண்டுள்ளது.
இதனால், பெரிய நிறுவனங்கள் AI-யை அதிகமாக பயன்படுத்தத் தொடங்கினால் outsourcing வேலைகள் குறையும். அதன் விளைவாக பலருக்கு வேலை போகலாம் என IT ஊழியர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.








